தேசம் தேர்தல் களம்-14 கேமரன்மலையில் தேசிய முன்னணி வேட்பாளர் சிவராஜுக்கு ஆதரவு பெருகியுள்ளது!

தேசம் தேர்தல் களம்-14 கேமரன்மலையில் தேசிய முன்னணி வேட்பாளர் சிவராஜுக்கு ஆதரவு பெருகியுள்ளது!

தேசம் செய்தியாளர் : குணசேகரன் கணேசன்

கேமரன்மலை ஏப்ரல் 30-
        கேமரன்மலையில் தேசிய முன்னனி வேட்பாளர் டத்தோ சிவராஜ் சந்திரனுக்கு மக்கள் ஆதரவு குறிப்பாக இந்தியர்கள் ஆதரவு பெருகியுள்ளது என்பது தேசம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
         கடந்த காலங்களில் மஇகா கோட்டையாக இருந்து வந்த கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் 2013இல் போட்டியிட்ட டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் 400க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக கேமரன்மலை தொகுதியில் சேவையாற்றி வரும் சிவராஜ் மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளார்.
தேசம் செய்தியாளர் குணசேகரன் கணேசன் நேற்று சனிக்கிழமை நேரடியாக கேமரன்மலைக்குச் சென்று மக்களிடம் கேள்வி எழுப்பிய போது பலரும் தங்கள் ஆதரவு சிவராஜுக்குத்தான் என்றனர்.
          தானாராத்தாவில் ஸ்ரீ பிரிஞ்சாங் உணவகம் நடத்தி வரும் திருமதி ருக்குமணியிடம் பொதுத் தேர்தல் குறித்து கருத்து கேட்ட போது காலம் காலமாக தங்கள் ஆதரவு தேசிய முன்னனிக்குதான் என்றும் இங்கு போட்டியிடும் மஇகா வேட்பாளர் டத்தோ சிவராஜ் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார்.
    ்இவரைப் போலவே பலரும் தங்கள் ஆதரவு சிவராஜுக்குத்தான் என்றனர். எனினும் ஓட்டு ரகசியம் கருதி தங்கள் பெயர் விவரங்களை தெரிவிக்கவில்லை.
          கேமரன்மலையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் சிவராஜ் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியிருந்தாலும் மக்கள் ஆதரவில் வெற்றி பெறுவார் என்று தேசம் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Comments