பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவை கைப்பற்றினால் இலவச கல்வி! செந்தோசா வேட்பாளர் குணராஜ் அறிவிப்பு தேசம் தேர்தல் களம்-14

பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவை கைப்பற்றினால் இலவச கல்வி!
செந்தோசா வேட்பாளர் குணராஜ் அறிவிப்பு

தேசம் தேர்தல் களம்-14 

கிள்ளாள் ஏப்ரல் 29-
        பக்காதான் ஹராப்பான் புத்ரா ஜெயாவை கைப்பற்றினால் மாணவர்கள் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும். அதேநேரத்தில் அரசாங்க பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும் என்று செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் கெஅடிலான் வேட்பாளர் குணராஜ் ஜி.ராசையா கூறினார்.
        இந்நாட்டில் மாணவர்களுக்கு இலவச கல்வி மிகவும் அவசியம். பிடிபிடிஎன் கடன் பெற்று அதனை மீண்டும் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். மாணவர்கள் படித்து முடித்தவுடன் கடன்கார ர் ஆகிவிடுகின்றனர். ஆகையால், மாணவர்களுக்கு இலவச கல்வி மிகவும் அவசியம். அதுமட்டுமின்றி மேலும் பல சலுகைகளை பக்காத்தான் ஹராப்பான் வழங்கும் என்று நேற்று சனிக்கிழமை இரவு கிள்ளானில் தேர்தல் பிரச்சார நிகழ்வில. உரையாற்றுகையில் குணராஜ் குறிப்பிட்டார்.
       குணராஜ் கெஅடிலான் கட்சியின் சார்பில் செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments