தேசம் தேர்தல் களம்-14 எதிர்க்கட்சி கட்சி இந்திய வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது!

தேசம் தேர்தல் களம்-14
எதிர்க்கட்சி கட்சி இந்திய வேட்பாளர்களின்  தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது!

தேசம் செய்தியாளர்: ஜீவானந்தன்

கோலாலம்பூர், ஏப்ரல் 29-
      எதிர்க்கட்சி நம்பிக்கை  கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய வேட்பாளர்கள் இன்னும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
        எதிர்க்கட்சி பல தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று கூறப்படுவதற்கு மாற்றம் தேவை எனும் சிந்தனை ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று அந்த அரசியல் ஆய்வு கூறுகிறது. அதேநேரத்தில் எதிர்க்கட்சி இந்திய வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. கிள்ளான், செந்தோசாவில் குணராஜ் இரவும் பகலும் பிரச்சாரம் செய்து வருகிறார். இவரைப் போலவே பத்து காஜா நாடாளுமன்றத் தொகுதியில் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார். ஆலயம், கடைத் தெரு, உணவகம், காய்கறி சந்தை என்று களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்கள். மேலும் சார்ல்ஸ் சந்தியாகோ, குலசேகரன், கேசவன், சிவராசா, மைக்கல் ஜெயகுமார், எட்மண்ட் சந்தாரா, கணபதிராவ் உள்ளிட்ட பலரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments