மலேசிய மண்ணின் மைந்தன் வினோத் நாயகன்! ஏப்ரல் 19 முதல் 32 திரையரங்குகளில் கலக்கவிருக்கிறது வில்லவன்! மலேசியர்கள் ஆதரவு வழங்க கோரிக்கை!

மலேசிய மண்ணின் மைந்தன் வினோத் நாயகன்! 
ஏப்ரல் 19 முதல் 32 திரையரங்குகளில் கலக்கவிருக்கிறது வில்லவன்!
மலேசியர்கள் ஆதரவு வழங்க கோரிக்கை!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 13-
        மலேசிய கலைத்துறை பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. சினிமா படங்களுக்கு நிகராக நமது படங்கள்  அபார வளர்ச்சி கண்டுள்ளது என்பதற்கு வில்லவன் திரைப்படம் ஒரு உதாரணம் என்று துணிந்து கூறலாம்.
          சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற மகனின் ஆசையை  ஜிவிகேஎம் எலிஃபென் பிக்சர்ஸ் மூலம் நிறைவேற்றி வைத்துள்ளா தந்தை டத்தோஸ்ரீ மோகன சுந்தரம்.
          ஒரு குழு முயற்சியில் இயக்குநர் வசந்த் அவர்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட படம் வில்லவன்.
மலேசிய மண்ணின் கலைஞர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள  வில்லவன் திரைப்படம்  ஏப்ரல் 19ஆம் தேதி முதல்  நாடு தழுவிய நிலையில் சுமார் 32 திரையரங்குகளில் திரையேறவிருப்பதாக வில்லவன் தயாரிப்பாளர் டத்தோஸ்ரீ மோகனசுந்தரம் தெரிவித்தார்.
      இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட  வினோத் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சங்கீதா கிருஷ்ணசாமி நடித்துள்ளார். மேலும்  இப்படத்தில் மலேசிய கலைஞர்கள் லோகன், உமாகாந்தன் உள்ளிட்ட பலரும்  நடித்துள்ளனர்.
      நமது சமுதாயத்தில் சிலர் உண்மையில் செய்யும் பல தவறுகளைத் தட்டிக் கேட்கத் தயங்கும் இளைஞர்களுக்கு இப்படம் ஒரு படிப்பினை. இப்படத்தில் ஒரு இளைஞர் சமுதாயத்தில் நிகழும் தவறுகளைத் தட்டிக் கேட்பதை  கருவாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. வில்லவன் திரைப்படம் டத்தோஸ்ரீ மோகனசுந்தரம் தயாரிப்பிலும் கணேஷின் நிர்வாகத் தயாரிப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
     இந்திய சினிமா திரைப்படங்களுக்கு நிகராக நவீன பாணியில் ஒரு கமர்ஷல் திரைப்படமாக இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில்  தொழில்நுட்பம், குரல் பதிவு, இசைப் பதிவு என பல முக்கிய அம்சங்கள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டது என டத்தோஸ்ரீ மோகன சுந்தரம் தெரிவித்தார்.
           கடந்த 2016ஆம் ஆண்டு வில்லவன் திரைப்படம் படமாக்கப்பட்டது. இந்தப் படம் சுற்றுலாத் தளமாக திகழ்ந்து வரும் மலாக்காவில் 75 விழுக்காடு படமாக்கப்பட்டது. மேலும் இந்திய சினிமா படங்களின் படப்பிடிப்பை கூட முறையாக நடத்த சிந்திக்கும் கலைஞர்களுக்கு மத்தியில்  நேப்பாளத்தில் 142 மீட்டர் உயரம் கொண்ட சிவன் சிலை உள்ளிட்ட பல இடங்களில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
       வில்லவன் திரைப்படத்தில் 5  ஒளியேறி விட்டன. இப்பாடல்களும் டிரைலரும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. 1 மணி நேரம் 55 நிமிடங்கள் நீடிக்கும் இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. ஷா இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஒரு பாடலை சினிமா பாடகர் கார்த்திக் பாடியிருக்கிறார். இந்தத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்றும் டத்தோஸ்ரீ மோகன சுந்தரம் நம்பிக்கை தெரிவித்தார்.
      அதுமட்டுமில்லாமல்  இத்திரைப்படம் ஹிந்தி, மலையாளம், நேபாள் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு இதர மொழிகளில் வெயிடுவதற்கு வேலைகள் நடைபெற்று வருகிறது என அவர் கூறினார்.
       இத்திரைப்படத்தின் நாயகன் வினோத் முதலில் கதாநாயகனாக நடிக்கத் தயங்கியதாகவும் இயக்குநர் கொடுத்த ஊக்குவிப்பினால் இப்படத்தில் நடித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
       மலேசியத் திரைப்படங்களுக்கு நல்ல ஆதரவு உள்ளது.  ரசிகர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்தால் மலேசியாவில் அதிக திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதோடு மலேசிய கலைஞர்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக அமையும் என்றால் அவர்.
      ஆகையால், இத்திரைப்படத்தை மக்கள் திரையரங்குகளில் கண்டுகளிக்க வேண்டும் என்று திரைப்படக்குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
         வில்லவன் ஏப்ரல் 19 முதல் ரசிகர்களை சந்திக்க வருகிறான். காணத்தவறாதீர்கள்!

Comments