ஏப்ரல் 19 முதல் 32 திரையரங்குகளில் கலக்கவிருக்கிறான் வில்லவன்! மலேசியர்கள் அணிதிரண்டு ஆதரவு வழங்க கோரிக்கை!

ஏப்ரல் 19 முதல் 32 திரையரங்குகளில் கலக்கவிருக்கிறான் வில்லவன்!
மலேசியர்கள் அணிதிரண்டு ஆதரவு வழங்க கோரிக்கை!


குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 19-
           ஜிவிகேஎம் எலிஃபென் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் டத்தோஸ்ரீ மோகனசுந்தரம் தயாரித்துள்ள வில்லவன் ஏப்ரல் 19 முதல் நாடு தழுவிய நிலையில் 32 திரையரங்குகளை கலக்க வருகிறான்.
      இந்த திரைப்படத்தில் வினோத் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சங்கீதா கிருஷ்ணசாமி நடித்துள்ளார்.
மேலும்  இப்படத்தில் மலேசிய கலைஞர்கள் லோகன், உமாகாந்தன் உள்ளிட்ட பலரும்  நடித்துள்ளனர்.
    இப்படம் சமுதாயத்தில் நிகழும் தவறுகளைத் தட்டிக் கேட்பதை  கருவாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வில்லவன் திரைப்படம் டத்தோஸ்ரீ மோகனசுந்தரம் தயாரிப்பிலும் கணேஷின் நிர்வாகத் தயாரிப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
           கடந்த 2016ஆம் ஆண்டு வில்லவன் திரைப்படம் முழுக்க முழுக்க மலாக்காவில் 75 விழுக்காடு படமாக்கப்பட்டது. அதேநேரத்தில் நேப்பாளத்தில் 142 மீட்டர் உயரம் கொண்ட சிவன் சிலை உள்ளிட்ட பல இடங்களில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
       மலேசியத் திரைப்படங்களுக்கு நல்ல ஆதரவு உள்ளது.  ரசிகர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்தால் மலேசியாவில் அதிக திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதோடு மலேசிய கலைஞர்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக அமையும். ஆகையால், இத்திரைப்படத்தை மக்கள் திரையரங்குகளில் கண்டுகளிக்க வேண்டும் என்று திரைப்படக்குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
         வில்லவன் ஏப்ரல் 19 முதல் ரசிகர்களை சந்திக்க வருகிறான். காணத்தவறாதீர்கள்!

Comments