தேசம் தேர்தல் களம்.... பகுதி 1... எழுத்து : குணாளன் மணியம் வெல்வோம் - மஇகா வீழ்த்துவோம் - நம்பிக்கை கூட்டணி மக்கள் மனதில் நிலைப்பவர் யார்?

தேசம் தேர்தல் களம்....
பகுதி 1...
எழுத்து : 
 குணாளன் மணியம்

வெல்வோம் - மஇகா
வீழ்த்துவோம் - 
நம்பிக்கை கூட்டணி

மக்கள் மனதில் நிலைப்பவர் யார்?

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தேசிய முன்னனியும் எதிர்க்கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு மக்களுக்காக சேவையாற்றுவதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் இன்று வரும், நாளை வரும் என்ற எதிர்ப்பார்ப்பு அரசியல் கட்சிகளைக் காட்டிலும் மக்கள் மத்தியில்தான் அதிகம் காணப்பட்டு வருகிறது. ஏனெனில் தங்கள் தேவைகளை யார் பூர்த்தி செய்யப் போகிறார்கள் என்பது மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
          நாட்டில் அரசியல் நிலை இப்படியிருக்க மஇகா பொதுத்தேர்தலுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறது. இந்த முறை வரும் பொதுத் தேர்தல் ம இ காவிற்கு மட்டும் சவால்மிக்க தேர்தலாக அமையவில்லை. மாறாக எதிர்க்கட்சிகளுக்கும் சவால்மிக்க தேர்தலாக அமைந்துள்ளது. இதற்கு தொகுதி மறுசீரமைப்பு முக்கிய காரணமாகும். இத்தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் தேசிய முன்னனி, அதன் உறுப்புக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என்று எல்லா நிலையிலான வேட்பாளர்களும் தங்கள் வெற்றியை உறுதி செய்ய முடியாக அளவிற்கு ஒரு சவால்மிக்கத் தேர்தலாக இத்தேர்தல் அமைந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.
         மஇகா  ஆதரவாளர்கள் தொடர்ந்து தங்கள் கடமையை செய்து வருகிறார்கள். அதேநேரத்தில் எதிர்க்கட்சி இந்தியத் தலைவர்களும் தங்கள் தேர்தல் வேலையைத் தொடங்கி விட்டார்கள்.
      மஇகாவின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யக்கூடிய தேர்தல் இதுவாகும் என்பது பலரது கருத்து. இதற்கு கடந்த காலங்களில் குறிப்பாக ஹிண்ட்ராப் பேரணிக்கு முன்பு நிகழ்ந்த பல கசப்பான அனுபவங்கள் மக்களுக்கு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி 2008இல் நடந்த மாபெரும் ஹிண்ட்ராப் பேரணி ஒரு சுனாமியை ஏற்படுத்தி எதிர்க்கட்சிக்கு சாதகமாக அமைந்தது. அதேநிலைதான் 2013 பொதுத்தேர்தலிலும் நடந்தது. ஆனால், ஹிண்ட்ராப் உடைந்து  மக்கள் மனதில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
     கடந்த 10 ஆண்டு கால எதிர்க்கட்சி கூட்டமைப்பு  ஆட்சியில் சிலாங்கூர் மாநில இந்தியர்கள் அடைந்த நன்மை என்ன என்பது மஇகா தலைவர்களின் கேள்வி. சிலாங்கூர் மாநிலம் மட்டுமன்றி பினாங்கு இந்தியர்கள் என்ன மேம்பாட்டை அடைந்திருக்கிறார்கள் என்பதும் ம இ கா தலைவர்களின் கேள்வி. இந்தத் தேர்தலில் கண்டிப்பாக மஇகா வெற்றி பெறும் என்பது தலைவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆனால், மஇகா மக்கள் ஆதரவை பெற்றுள்ளதா?

பகுதி 1....

Comments