தேசம் தேர்தல் களம்.... பகுதி 2.... எழுத்து : குணாளன் மணியம் மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளதா மஇகா? எதிர்க்கட்சி இந்தியர்களுக்கு என்ன செய்தது?

தேசம் தேர்தல் களம்....

பகுதி 2....

எழுத்து : 
குணாளன் மணியம்


மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளதா மஇகா?
எதிர்க்கட்சி இந்தியர்களுக்கு என்ன செய்தது?

        நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவை வீழ்த்திக் காட்டுவோம் என்று எதிர்க்கட்சி கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் வேளையில் மஇகா மக்கள் ஆதரவைத் திரட்ட பலவழிகளைக் கையாண்டு வருகிறது.
இந்நிலையில் மஇகா மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளதா என்பதுதான் தற்போதைய கேள்வி?
          மஇகா மக்கள் ஆதரவை பெற்றுள்ளதா என்பதை பார்க்கும் முன் அக்கட்சி மக்கள் ஆதரவை இழந்ததற்கு என்ன காரணம் என்பதை முதலில் பார்ப்போம். இந்தியர்கள் நலனை கவனிக்கத் தவறி விட்டதன் காரணமாக கடந்த 27.11.2007இல் நடந்த ஹிண்ட்ராப் பேரணி 2008இல் நடந்த பொதுத் தேர்தலில் மஇகா வெற்றியைப் பறித்துக் கொண்டுள்ளது. இந்தியர்களின் பல்வேறு பிரச்சினைகளை மஇகா கவனிக்கத் தவறி விட்டது என்பது இந்திய சமுதாயத்தின் குற்றச்சாட்டு. என்ன காரணத்தினால் மஇகாவிற்கு மக்கள் ஆதரவு குறைந்தது? இந்தியர்கள் மஇகா மீது அதிருப்தி கொண்டதற்கு ஏன்? இந்தியர்கள் மஇகா மீது கூறும் குற்றச்சாட்டு என்ன?
1. இந்திய சமுதாயத்திற்கு கிடைத்த ஒதுக்கீடுகள் அவர்களுக்கு முறையாகச் சென்று சேரவில்லை.
2. ஒரு சில பொறுப்பற்ற மஇகா தலைவர்களால் அடித்தட்டு மக்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
3.ஆலய உடைப்பு தொடர்ச்சியானதால் மக்கள் கொதித்தெழுந்தனர்
4. பொருளாதார ரீதியில் இந்தியர்கள் மிகவும் பின்தங்கியிருந்தனர்.
இப்படி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த இந்திய சமுதாய மக்கள் 2008, 2013 பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளர்களை புறக்கணித்தனர்.
கடந்த 10 ஆண்டுகளில் மஇகா மக்கள் ஆதரவை பெறுவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. மஇகா தலைமைத்துவ போராட்டம்  இரண்டு ஆண்டுகள் நீடித்தது. இதனால் இந்திய சமுதாய பிரச்சினையை மஇகா கவனிக்கவில்லை என்பது இந்திய சமுதாய மக்களின் பரவலான குற்றச்சாட்டு. இந்நிலையில் மஇகா தலைமைத்துவ போராட்டம் ஒரு முடிவுக்கு வந்து அதன் தேசியத் தலைவராக பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இந்தியர்களுக்காக பல திட்டங்களை அமல்படுத்தி இந்திய சமுதாய மக்களின் ஆதரவைத் திரட்டி வருகிறார். பல திட்டங்களை அறிமுகம் செய்து இழந்த ஆதரவை மீட்டு வருகிறார். இந்தியர்களின் ஆதரவைத் திரட்ட இன்னமும் பல நடவடிக்கைகளை மஇகா  மேற்கொண்டு  வருகிறது.
ஆனால், இந்திய சமுதாய மக்கள் ஆட்சி பீடத்தில் அமரவைத்த மக்கள் கூட்டணி இந்திய சமுதாய மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இந்திய சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றியதா?

தேசம் தேர்தல் களம்...
 பகுதி 2.....

Comments