மலேசியத் தமிழ் இசைத் துறைக்கு ஒரு மைல்கல் "இது நம்ம பாட்டு லா" அஸ்ட்ரோ வானவில் 201இல் ஏப்ரல் 15 தொடங்கி ஒவ்வொரு ஞாயிறும் இரவு 8.00 மணிக்கு ஒளியேறும்!

மலேசியத் தமிழ் இசைத் துறைக்கு ஒரு மைல்கல் "இது நம்ம பாட்டு லா"
அஸ்ட்ரோ வானவில் 201இல் ஏப்ரல் 15 தொடங்கி ஒவ்வொரு ஞாயிறும் இரவு 8.00 மணிக்கு ஒளியேறும்!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 7-
       மலேசியத் தமிழ் இசைத் துறைக்கு ஒரு மைல்கல் "இது நம்ம பாட்டு லா" இசை நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சி
அஸ்ட்ரோ வானவில் 201இல் ஏப்ரல் 15 தொடங்கி ஒவ்வொரு ஞாயிறும் இரவு 8.00 மணிக்கு ஒளியேறும்
என்று இந்திய நிகழ்ச்சிகள் குழுமத் தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறினார்.
           அஸ்ட்ரோ இந்திய பிரிவு தனது அலைவரிசை வாயிலாக மலேசியக் கலைஞர்களுக்கு பல நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் மலேசியத் தமிழ் இசைத் துறைக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் "இது நம்ம பாட்டு லா" நிகழ்ச்சி ஒளியேறவிருப்பதாக அறிமுகவிழாவில் டாக்டர் ராஜாமணி தெரிவித்தார்.
          இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், என்று கலைத்துறையில் முத்திரை பதித்த பல. கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறார்கள்.
இதில் திலீப் வர்மன், இசையமைப்பாளர் ஜித்திஸ், முகேன் ராவ், ஷமேஷன் மணிமாறன், இசையமைப்பாளர் ஜெய் ராகவன், வினேஷ், பாடகர் ரேபிட் மேக், சந்தேஷ், விக்னேஷ் ஜெய், ஷேன் எஃதிரிம், டார்க்கி, புனிதா ராஜா, சைக்கோ மந்த்ரா, ஹேவோக் பிரதர்ஸ் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.

Comments