சிலாங்கூர் சுக்கிம் 2018 சிலம்பம் தேர்வு! இளம் வீரர்களின் படையெடுப்பால் களைகட்டியது புக்கிட் ஜாலில்!

சிலாங்கூர் சுக்கிம் 2018 சிலம்பம் தேர்வு!
இளம் வீரர்களின் படையெடுப்பால்  களைகட்டியது புக்கிட் ஜாலில்!

புக்கிட் ஜாலில், ஏப்ரல் 22-
     மலேசிய இந்தியர் விளையாட்டுப் போட்டிகள் என்றழைக்கப்படும் சுக்கிம் போட்டிகள் இந்த வருடம் 5ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.
இந்தப் போட்டிகளில் சிலம்பம் பிரிவில் சிலாங்கூர் மாநிலத்தை பிரதிநிதிக்கும் போட்டியாளர்களுக்கான தேர்வு புக்கிட் ஜாலில் அரங்கில் நடந்தேறியது.
    ்இதில் கலந்து கொள்ள இளம் வீரர்கள் பலர் படையெடுத்த நிலையில் புக்கிட் ஜாலில் அரங்கமே களை கட்டியதென அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
   நமது கலையான சிலம்பம் குறித்த ஆர்வத்தையும், அது சார்ந்த விழிப்புணர்வையும் இளைஞர்களிடத்தில் உருவாக்கும் வண்ணம் சிலம்பம்  சுக்கிம் போட்டிகளில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
     சுக்கிம் போட்டிகள் சமுதாய விளையாட்டுத் திருவிழாவாக   வருடா வருடம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. நமது சமுதாய இளம் விளையாட்டாளர்களை ஓரிடத்தில் ஒருங்கிணைக்கும் நிலைப்பாட்டையும்  சுக்கிம் கொண்டுள்ளது.
      நமது சமுதாயத்திருவிழா சுக்கிம் 2018 வருகின்ற ஜூலை மாதம் 2 ம் தேதி முதல் 8ம் தேதி வரை யூ.பி.எம் இல்  நடைபெறுகிறது என சுக்கிம் 2018 ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Comments