சித்திரைப் புத்தாண்டில் மிபாவின் சாதனை 4-0 என்ற கோல்கணக்கில் யு.ஐ.டி.எம் எப்.சி அணியை வீழ்த்தியது

சித்திரைப் புத்தாண்டில் மிபாவின் சாதனை 
4-0 என்ற கோல்கணக்கில் யு.ஐ.டி.எம் எப்.சி அணியை வீழ்த்தியது

கோலாலம்பூர், ஏப்ரல் 17-
       மலேசிய பிரிமியர்  லீக்கில் களம் கண்டுள்ள இந்தியர் அணி மிஃபா  யு.ஐ.டி.எம் எப்.சி அணியுடனான ஆட்டத்தில் 4-0 என்ற கோல்கணக்கில் வெற்றி வாகை சூடியது. சித்திரைப்புத்தாண்டை வெற்றியோடு துவக்கியமை மகிழ்ச்சி அளிப்பதாக மிஃபாவின் தலைவரும், செனட்டருமான டத்தோ டி.மோகன் தெரிவித்துள்ளர்.
     கிளானாஜெயா எம்.பி.பி.ஜே அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில்  4 வது நிமிடத்தில் நமது அணிக்கான முதல் கோலை இமான் செடி அடித்தார்.
அதனையடுத்து 45 வது நிமிடத்திலும் 1 கோலை புகுத்தினார்.
2-0 என்ற முன்னிலையில் பிற்பாதி ஆட்டத்தை துவக்கிய மிஃபா அணிக்கு  65 வது நிமிடத்தில்   ஷெர்மன் மற்றும்  74 வது நிமிடத்தில் ராஜேஷ் ஆகியோர் தலா 1 கோல் அடிக்க ஆட்டம் 4-0 என்றானது.
மிகச்சிறப்பான ஆட்டத்தை நமது அணி வீரர்கள் வெளிப்படுத்தி புத்தாண்டு பரிசாக நமக்கு வெற்றியை தேடித்தந்துள்ளனர். இந்த வெற்றி வருகின்ற ஆட்டங்களிலும் தொடர கடுமையான பயிற்சிகள் வழங்கப்படவிருப்பதாக அணியின் பயிற்றுநர் கே.தேவன் கூறினார்.
இந்த வெற்றி குறித்து மிஃபாவின் மேலாளர் ஏ.எஸ்.பி துவான் ராஜன் குறிப்பிடுகையில் நமது சமுதாயத்தினர்கள் நமது அணிக்கான ஆதரவினை இன்னும் அதிகமாக பலப்படுத்த வேண்டும். ஆட்டம் நடைபெறும் இடங்களில் திரண்டு நமது வீரர்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும் என்றார்.
மேலும் வருகின்ற 24/4/2018 (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் கிளானாஜெயா எம்.பி.பி.ஜே அரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் நமது அணி பி.டி.ஆர்.எம் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தைக்காண நமது சமுதாயப்பெருமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். நமது அணி  7 ஆட்டங்களில் பங்கெடுத்து 2 ஆட்டங்களில் வெற்றியும், 4 ஆட்டங்களில் சமநிலையும், 1 ஆட்டத்தில் தோல்வியும் கண்டு 10 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments