ஆலயங்கள், இயக்கங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு வெ.7 லட்சம் நிதியுதவி! ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வழங்கினார்

ஆலயங்கள், இயக்கங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு வெ.7 லட்சம் நிதியுதவி!
ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வழங்கினார்

செய்தியாளர் :
 குணாளன் மணியம்
படங்கள் :
 ஹரிஸ்ரீனிவாஸ்
கிள்ளான், ஏப்ரல் 8-
          சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் ஆலயங்கள், பொது இயக்கங்கள், உயர்கல்வி மாணவர்கள் ஆகியோருக்கு மொத்தம் 7 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் கூறினார்.
           சிலாங்கூர் மாநில அரசு இந்தியர் நலனுக்காக பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
இதில் ஆலயங்கள், பொது இயக்கங்கள், மாணவர்கள் என்று பலருக்கு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக கிள்ளானில் ஆலயங்கள், 40 இயக்கங்கள், மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கிய போது செய்தியாளர்களிடம் கணபதிராவ் தெரிவித்தார்.
          நாங்கள் வாக்குறுதி வழங்கிவிட்டு பிறகு நிதி வழங்கவில்லை.  மாறாக இத்தகைய திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு உடனடியாக இதனை அமல்படுத்தி நிதியுதவி வழங்குவதாக கணபதிராவ் சொன்னார்.
           ஒரு சில அரசியல் கட்சிகள் வாக்குறுதி வழங்கிவிட்டு அதன் பிறகு மாதிரி காசோலையை வழங்கி அதன்பிறகு பலநாள் கழித்து காசோலை வழங்குகிறார்கள். நாங்கள் அப்படியல்ல. ஒரு திட்டத்தை வகுத்த மறுகணமே உடனடியாக நிதியை வழங்கி விடுவோம். எதையும் மறைத்து வழங்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் நேரடியாகவே நிதியை வழங்கி வருகிறோம் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.
          இந்த நிகழ்ச்சியில் ஆலயங்கள், பொது இயக்கங்கள், மாணவர்கள் என்று கிட்டத்தட்ட 7 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் சில இயக்கங்களுக்கு காசோலையை எடுத்து வழங்கினார்.

Comments