ஏப்ரல் 8 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ளுங்கள்! உங்கள் எதிர்காலத்திற்கு வழிகாட்ட உங்களை நாடி வருகிறது செடிக்! தினாளன் டி.ராஜகோபால் அழைப்பு

ஏப்ரல் 8 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ளுங்கள்!
 உங்கள் எதிர்காலத்திற்கு வழிகாட்ட உங்களை நாடி வருகிறது செடிக்!
தினாளன் டி.ராஜகோபால் அழைப்பு

 போர்ட்டிக்சன், ஏப்ரல் 7-   
        இவ்வட்டாரத்தில்  எஸ்.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் சிறந்த தேர்ச்சியினை பெறாத  மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்ட செடிக் வழி   சிறப்பு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நாளை 8/04/2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளியில்  நடைபெறவுள்ளது. இந்த அற்புத நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மஇகா தேசிய இளைஞர் பகுதித் துணைத்தலைவர் தினாளன் டி.ராஜகோபால் அழைப்பு விடுத்துள்ளார்.
     இந்த கருத்தரங்கின் நோக்கம் எஸ்.பி.எம் தேர்வில் சரியான அடைவுநிலையை அடையாத மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான எதிர்காலத்திற்கு வழிகாட்டுதலாகும் என்றார் அவர்.
     ஏனெனில் பல மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை நினைத்து வருத்தம் கொண்டு குழப்பமான சூழலை எதிர்நோக்கி வருகிறார்கள். அந்த வகையில் அவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் சரியான வழிகாட்டுதலை அளிக்கவே இந்த முயற்சி மேற்கொள்ள
ப்பட்டுள்ளது. முயற்சி மேற்கொள்வது எங்களின் கடமை என்ற நிலைப்பாட்டில் பயன்பெறுவது உங்களின் கடமை. வாருங்கள் வரவேற்கிறோம்!
உங்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டுகிறோம்*! என தினாளன் தமதறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.

Comments