மலேசிய வரலாற்றுப் பதிவில் தமிழர்கள் தமிழ்ப்பள்ளி அடையாளங்களை இழந்துவிடக் கூடாது! மு.வீ.மதியழகன் நினைவுறுத்து.

மலேசிய வரலாற்றுப் பதிவில் தமிழர்கள்  தமிழ்ப்பள்ளி அடையாளங்களை இழந்துவிடக் கூடாது!
மு.வீ.மதியழகன் நினைவுறுத்து.

பினாங்கு, ஏப்.3-
      ஒரு இனத்தை அழித்தொழிக்க வேண்டுமாயின் அவர்களின் தாய்மொழி மீது கைவைத்தாலே போதும், அந்த இனம் தானாக அழிந்து போகும்.
     அதுபோல் தமிழ் மொழி வாழ, வாழவைத்திட ஆயிரம் வழிகள் சட்டங்களாகவும்
தமிழர்களின் உரிமைகளாகவும் இருக்கும் ஒரு ஜனநாயக நாட்டில், தமிழர்களே தமிழை சாகடித்திட முயற்சி செய்தால் அதற்கு பெயர் தற்கொலைக்கு சமமாகும் என ஐ.பி.எப் கட்சியின் தேசியத் தலைவர் மு.வீ.மதியழகன் சாடினார்.
     மலேசிய கல்வி வரலாற்றில் வெறும் பத்தே பத்து மாணவ மாணவியரை கொண்ட 44 பள்ளிக்கூடங்கள் இடமாற்றம் காண்பதாக கல்வியமைச்சு முடிவெடுத்திருப்பதை ஐபிஎப் உத்தாமா கட்சி வரவேற்கின்றது.
மாணவ மாணவியர் பற்றாக்குறையை  காரணங்காட்டி மூடுவிழா செய்திடாது அப்பள்ளிகளை மேம்படுத்திட எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குறியது.
இடம் மாற்றம் காணும் 44  பள்ளிகளில்
அசல் 22.  தமிழ்ப்பள்ளியும், சீனப்பள்ளியும்,
தேசிய பள்ளிகளும் அடக்கமாகும்.
தோட்டங்கள் துண்டாடல், மேம்பாட்டு திட்டங்களால் கிராமங்களை அழித்தல்
அதனைவிட தாய்மொழி கல்வியை அம்மொழிக்கான இனமே அலட்சியம் செய்வதினால் பின்விளைவுகளே 44 பள்ளிகளுக்கான அவலநிலை.
இடமாற்றம் காணும் பள்ளிக்கூடங்களின் நிலைபாடு தொடர்ந்து கவலைதரும் இடத்தை தக்கவைக்குமாயின் இப்பள்ளிகளை அரசாங்கம் மூடுவிழா எடுப்பதைவிட மாற்று வழி என்பதே இல்லாது போகும்.
காலத்தில் தமிழ் மொழி கல்வி மேம்பாட்டிற்கு தமிழர்கள் தன்னையே தியாகித்திட வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம் என்பதற்கு இந்த 22-தமிழ்ப்பள்ளிகளே ஆதாரமாகும்.
அதில் பேராக் மாநிலம் முன்னிலை வகிப்பது அதிர்ச்சியை தருகிறது என அவர் தெரிவித்தார்.
இந்த அவல நிலையைப் போக்க தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை கட்டாயம் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்ப தவறக்கூடாது என நினைவுறுத்தினார்.

Comments