மஇகா இளைஞர்கள் மக்களோடு நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்து

மஇகா இளைஞர்கள் மக்களோடு நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்! 
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்து

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 11-
           நாடு தழுவிய நிலையில் இருக்கும் மஇகா இளைஞர்கள் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மஇகா உதவித் தலைவர் டான்ஸ்ரீ  எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கூறினார்.
           மஇகா இளைஞர்கள் எல்லா நேரத்திலும் முடிந்தவரையில் மக்களோடு நட்பு பாராட்ட வேண்டும். நாடு தழுவிய நிலையில் இருக்கும் மஇகா இளைஞர்கள் தத்தம்  இடங்களில் இருக்கும் மக்களை சந்திக்க வேண்டும் என்று நெகிரி செம்பிலானில் நட்புறவு இயக்கத்தை தொடக்கி வைத்த பிறகு தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு செய்தியில் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.
         மஇகா நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டியது  இளைஞர்களின் கடமை. இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்று கூறுவார்கள். அதேநேரத்தில் இளைஞர் சக்தி மகத்தான சக்தி என்பதால் மஇகா நலன் குறித்து இளைஞர்கள்தான் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் சொன்னார்.
         இந்த நிகழ்ச்சியில் நெகிரி செம்பிலான் நட்புறவு இயக்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
           ஒரு காலத்தில்  நாடாளுமன்றத்திற்கு இந்தியர்கள் அதிகம் செல்ல முடியாத சூழல் இருந்தது. ஆனால், டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் மேலவைத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட பிறகு அதிகமான இந்தியர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தருகின்றனர். இதில் குறிப்பாக மஇகா தொகுதி, கிளைத் தலைவர்கள் அதிகம் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments