எழுச்சிமிக்க சமுதாயத்தை உருவாக்குவோம்! நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

எழுச்சிமிக்க சமுதாயத்தை உருவாக்குவோம்!
நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், ஏப்ரல் 14-
       இந்த சித்திரை புத்தாண்டில் புதிய சிந்தனையோடு  எழுச்சிமிக்க  சமுதாயத்தை உருவாக்குவோம் என்று நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
       புத்தாண்டில் புதிய சகாப்தம், புதிய சிந்தனை, புதிய பார்வை என்று ஒவ்வொரு மனிதனும் தனது லட்சியக் கனவில் சாதனை படைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முயற்சி திருவினையாக்கும் என்பது போல நாம் அதற்கான  நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். எல்லா வாளமும் கொண்ட நம் நாட்டில் பொருளாதாரத்தில் முன்னேற நாம் வழிவகுத்து செயல்பட வேண்டும்.                                 மூவீன மக்கள் வாழும் நம்நாட்டில் பல்வேறு கலை, கலாச்சாரம், பண்பாடு இருந்தாலும் அதை புரிந்துணர்வுடனும்  ஐக்கியமும் நட்புணர்வும்   கொண்டு மக்கள் வாழ்வதால் நமது ஒருமைப்பாடு தழைத்தோங்குகிறது. ஒரு நிலையான ஆட்சியும் சுபீட்சமான அரசாங்கமும் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கும் கொள்கையை கொண்டு ஆட்சி செய்கிறது. தமிழர் வாழ்வும் வரலாறும் பின்னி பினைந்ததுதான் இந்த சித்திரைப் புதத்தாண்டு இந்திர விழா வசந்த விழா என்றெல்லாம் கொண்டாடி கழித்து இச்சித்திரைத் திருநாளில்தான் திங்களையும் செங்கதிரோனையும் மாமழையையும் போற்றி இயற்கையோடு இயந்து இன்புற்று வாழ்ந்த தமிழர்களின் சிறப்புக்கு சித்திரை திருநாள் சிறந்த எடுத்துக்காட்டாகும் இத்திருநாள் மலேசிய இந்தியர்களுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்வதாக ம.இ.கா தேசிய உதவித் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ. ச.விக்னேஸ்வரன் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Comments