இங்கிலாந்தில் காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கும் ஷோகம் மாநாடு! நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்ரன் லண்டனில் பயணத்தை தொடங்கினார்!

இங்கிலாந்தில் காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கும் ஷோகம் மாநாடு!
நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்ரன் லண்டனில் பயணத்தை தொடங்கினார்!

லண்டனில் இருந்து சிவசுப்பிரமணியம்

லண்டன், ஏப்ரல் 17-
         காமன்வொல்த் நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் பங்கேற்கும் ஷோகம் மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்பை பிரதிநிதித்து கலந்து கொள்ளள மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் மலேசிய பேராளர் குழுவுக்கு தலைமையேற்று திங்கட்கிழமை லண்டன் சென்று சேர்ந்தார்.
          இம்மாநாடு ஏப்ரல் 18ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி ஏப்ரல் 21ஆம் நாள் முடிவடைகிறது.
பிரிட்டிஷ் காலனித்துவத்தில் இருந்த உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த 25ஆவது ஷோகம் மாநாட்டில் மலேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதித்து பங்கேற்கும் முதல் தமிழர் என்று மலேசிய, உலக வரலாற்றில் இந்த வருகை பதிவாகிறது.
      இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஏப்ரல் 15 ஞாயிற்றுக்கிழமை டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
        மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் பேராளர் குழுவினரை மலேசியத் தூதர் குழுவினர் வரவேற்றனர்.

Comments