காமன்வெல்த் மாநாட்டில் நாட்டின் பிரதமரை பிரதிநிதித்து கலந்து கொண்ட முதல் இந்தியர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்! லண்டனிலிருந்து சிவசுப்பிரமணியம்

காமன்வெல்த் மாநாட்டில் நாட்டின் பிரதமரை பிரதிநிதித்து கலந்து  கொண்ட முதல் இந்தியர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்!

லண்டனிலிருந்து சிவசுப்பிரமணியம்

லண்டன், ஏப்ரல் 18-     
          மலேசியாவைப் பிரதிநிதித்து காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட முதல் இந்தியராக திகழ்கிறார் மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்.
       லண்டன் நகரில் 25ஆவது காமன்வெல்த் மாநாடு திங்கட்கிழமை தொடங்கியது.
இங்கிலாந்து ஆட்சி செய்த நாடுகளின் கூட்டமைப்பான ஷோகம் எனப்படும் காமன்வெல்த் அமைப்பு அந்தந்த நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிம் தளமாக இந்த மாநாடு விளங்குகிறது.
        நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலை முன்னிட்டு இந்த மாநாட்டில் பிரதமரும் துணைப்பிரதமரும் கலந்து கொள்ள இயலவில்லை.
அதன்காரணமாகவே நாட்டின் உயர் பதவியான மேலவைத் தலைவர் பதவி வகிக்கும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இம்மாநாட்டில் கலந்து கொண்டு பெருமைச் சேர்த்துள்ளார்.
அனைத்துலக அளவில் மிகவும் பிரசித்திபெற்ற மாநாட்டிற்கு தமிழர் ஒருவர் நாட்டைப் பிரதிநிதிப்பது பெருமைக்குரியதாகும்.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மலேசியக் குழுவுக்கு தலைமையேற்பதோடு மாநாட்டில் உரை நிகழ்த்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments