போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளியில் மிஃபாவின் சமூக நலப்பணி! தினாளன் டி.ராஜகோபால் கலந்து கொண்டார்

போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளியில் மிஃபாவின் சமூக நலப்பணி!
தினாளன் டி.ராஜகோபால் கலந்து கொண்டார்

போர்ட்டிக்சன் ஏப்ரல் 7-
       இந்திய சமுதாய இளம் காற்பந்து  விளையாட்டாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்து அவர்களை காற்பந்துத் துறையில் முன்னேற்றி   வரும் மிஃபா சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் மஇகா இளைஞர் பகுதி தேசியத் துணைத்தலைவர்  தினாளன் டி.ராஜகோபால் தலைமையில் போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், கருத்தரங்கினையும், காற்பந்து பயிற்சிகளையும் மிஃபா வழங்கியது.
      இதில் கிட்டதட்ட 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தினாளன் கூறியதாவது விளையாட்டுத் துறையின் வழி நமது சமுதாய மாணவர்கள்
நல்வழிப்படுத்த படுகிறார்கள்.
அத்தகைய சூழலில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு  நல்ல கல்வியை அளிக்கின்ற நிலையில் அவர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்தவும் முனைப்பு காட்ட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
விளையாட்டுத் துறையின் வழியாகவும் அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
     காற்பந்துத்துறை சம்மேளனத்தின் அதிகாரியும், மிஃபாவின் ஆலோசகருமான டாக்டர் அண்ணாதுரை பெற்றோர்களுக்கு பிள்ளைகளை வளர்க்கும் முறை குறித்து தன்முனைப்பு பயிற்சிகளை வழங்கினார்.
சிறுவயதில் அவர்களின் மனதில் விதைக்கப்படுகின்ற விதை தான் நாளை அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்றார்.
ஆகவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து அவர்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மிஃபா அணியின் மேலாளர் துவான் ஏ.எஸ்.பி.ராஜன், பயிற்றுநர் கே.தேவன் ஆகியோரின் தலைமையில் மிஃபா விளையாட்டாளர்களின் ஒத்துழைப்போடு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.மேலும் அவர்களின் பயிற்சிகளுக்காக காற்பந்துகளும் வழங்கப்பட்டன
மிஃபாவின்   இந்த சமூக நலப்பணிக்கு பெற்றோர்கள் தங்களது நன்றியினை பறைசாற்றினர். ஒத்துழைப்பு நல்கிய போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை திருமதி அவர்களுக்கு மிஃபா குழுவினர்கள் நன்றி பாராட்டினர்.

Comments