கெராக்கான் கட்சிக்காக உழைத்த டத்தோ கோகிலனுக்கு சீட் இல்லையா? இந்தியர்களை கட்சி புறக்கணிக்கிறதா?

கெராக்கான் கட்சிக்காக உழைத்த டத்தோ கோகிலனுக்கு சீட் இல்லையா?
இந்தியர்களை கட்சி புறக்கணிக்கிறதா?

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 20-
          கெராக்கான் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ அ.கோகிலன் பிள்ளைக்கு கட்சித் தலைமை இதுவரை எந்த  சீட்டும் வழங்காத து கண்டு கட்சி இந்தியர்களிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
          கெராக்கான் கட்சியில் நீண்ட நெடுகாலம் சேவையாற்றி வந்துள்ள டத்தோ கோகிலன் கட்சிக்காக உழைத்தவர். கெராக்கான் கட்சியின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற லிம் கெங் எய்க் காலத்தில் இருந்து கட்சியில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லிம் கெங் எய்க் இந்தியர்கள் மரத்துக்குப் பின்னால் என்ன செய்கிறார்கள் என்று கூறிய போது இந்தியர்கள்  கொதித்தெழுந்தனர். அவரை தற்காத்தவர் டத்தோ கோகிலன். பினாங்கு முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ கோ சூ கூன் இந்தியர்களை கோசடப்பா என்று கூறிய போதும் அவரை தற்காத்து தீர்வு கண்டவர் டத்தோ கோகிலன். இப்படி கட்சிக்காக பலவற்னை செய்துள்ள டத்தோ கோகிலனுக்கு சீட் இல்லை என்ற கேள்வி கட்சியில் இருக்கும் இந்தியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
            நாட்டின் 13ஆவது பொதுத்தேர்தலில் பூச்சோங் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட கோகிலனுக்கு முதலில் பத்து காவான் தொகுதி வழங்கப்பட்டது. ஆனால், கோகிலன்  அதை வேண்டாம் என்று சொல்லி விட்டதாகவும் தனக்கு பத்து தொகுதி வேண்டும் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இங்கு டொமினிக் லாவ் ஹுய் சாய் போட்டியிடுவதாக தெரிகிறது. இதுவரையில் டத்தோ கோகிலனுக்கு  எந்த சீட்டும் வழங்கப்படவில்லை.
         இந்நிலையில் இதுகுறித்து டத்தோ கோகிலனை தொடர்பு கொண்டு கேட்ட போது தனக்கு இதுவரை எந்த தொகுதியிலும் வேலை செய்ய தனக்கு உத்தரவு வரவில்லை என்றும் தமது அரசியல் எதிர்காலம் குறித்து கட்சித் தலைமையும் பிரதமரும் முடிவு செய்யட்டும் என்று டத்தோ அ.கோகிலன் பிள்ளை தெரிவித்தார்.

Comments