காமன்வெல்த் நாடுகளின் உறவு வலுவடைந்துள்ளது! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் பெருமிதம்!

காமன்வெல்த் நாடுகளின் உறவு வலுவடைந்துள்ளது!  டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் பெருமிதம்!

லண்டனிலிருந்து சிவசுப்பிரமணியம்

லண்டன், ஏப்ரல் 22-     
          காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற நட்பு நாடுகள் மத்தியில் பரஸ்பர உறவையும் நல்லிணக்கமும்  மேலோங்கியுள்ளதாக மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை  பிரதிநிதித்து  அம்மாநாட்டில் கலந்து கொண்ட முதல் இந்தியராக திகழும் மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
       லண்டன் நகரில் 25ஆவது காமன்வெல்த் மாநாடு திங்கட்கிழமை தொடங்கியது.
இங்கிலாந்து ஆட்சி செய்த நாடுகளின் கூட்டமைப்பான ஷோகம் எனப்படும் காமன்வெல்த் அமைப்பு அந்தந்த நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிம் தளமாக இந்த மாநாடு விளங்குகிறது.
        இந்த மாநாட்டில் பிரதமரும் துணைப்பிரதமரும் கலந்து கொள்ள இயலாத சூழலில் நாட்டின் உயர் பதவியான மேலவைத் தலைவர் பதவி வகிக்கும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இம்மாநாட்டில் கலந்து கொண்டு பெருமைச் சேர்த்திருந்தார்.   
         இந்த மாநாடு வெள்ளிக்கிழமையோடு ஒரு நிறைவுக்கு வந்தது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள் மத்தியில் பரஸ்பர உறவும் நல்லிணக்கமும் மோலோங்கியிருந்தது மனநிறைவை தந்ததாக டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் சொன்னார்.
        இந்த மாநாட்டில் எலிசபெத் அரசியார், இங்கிலாந்து பிரதமர் திரெசா மே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அனைத்துலக அளவில் மிகவும் பிரசித்திபெற்ற மாநாட்டிற்கு தமிழர் ஒருவர் நாட்டைப் பிரதிநிதிப்பது பெருமைக்குரியதாகும்.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மலேசியக் குழுவுக்கு தலைமையேற்று மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.
          இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாகக் திகழ்ந்த இளைஞர் மாநாட்டில்  அதன் தலைவரான கிஷ்வா அம்பிகாபதி கலந்து கொண்டது மலேசிய இந்தியர்களுக்கு பெருமை சேர்ந்த விஷயமாகும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

Comments