பிறை தொகுதியை மீட்டெடுப்போம்! ம.இ.கா பத்து கவான் தொகுதி நம்பிக்கை

பிறை தொகுதியை மீட்டெடுப்போம்!
ம.இ.கா பத்து கவான் தொகுதி 
நம்பிக்கை

பினாங்கு, ஏப்.5-
     பினாங்கு மாநிலத்தில் ம.இ.காவின் கோட்டையாக விளங்கி வந்த பிறை சட்டமன்ற தொகுதி, கடந்த இரு தவணையாக எதிர்க்கட்சியான ஜசெக கைவசமானது.
     பேராசிரியர் பி.ராமசாமிக்கு துணை முதல்வர் பதவி  அந்தஸ்தை வழங்கிய அத்தொகுதி தற்போது கைமாறும் நிலை உறுவாகியுள்ளது.
     பிறை தொகுதியில் இந்தியர்களுக்கான எந்தவொரு வாழ்வாதார திட்டமும் செயல்படுத்தாது முதல், ஆலய விவகாரங்களில் தலையிட்டதோடு இந்து அறப்பணி வாரியம் மூலம் விநாயகர் ஆலயத்தை கையடக்கப்படுத்தியது, வெள்ளப்பிரச்சனையில் மெத்தனப் போக்கு மற்றும் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சனைகள் வரை தீர்வு காணப்படாமல் இருந்து வருவது தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்பு அலை தற்போது பலமாக வீசிக்கொண்டிருக்கிறது.     இத்தருணத்தில் ம.இ.காவினர் ஆட்சியில் இல்லாதபோதும் பல வகையில் உதவிகள் நல்கி மக்களிடம் நற்பெயரை நிலை நாட்டி வருகின்றனர்.
வெள்ளப் பேரிடர் ஏற்பட்டபோது,  விடியற்காலை வேளையில் ம.இ.காவினர் மக்களுக்கு வழங்கிய உதவிகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் எல்லா வீடுகளுக்கும் கிடைக்கும் வண்ணம் துரித நடவடிக்கை மேற்கொண்டது, பின்னர் பொருளுதவிகள் வழங்கியது வரை ம.இ.காவிற்கு நற்பெயர் கிடைத்து வந்துள்ளது
பிறை வட்டாரத்திலுள்ள ம.இ.கா கிளைகள், தேர்தல் இயந்திர ஐவர் கொண்ட குழுவினர், தொகுதி பொறுப்பாளர் என அனைவரும் மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து
செயல்பட்டதன் பயனாக மக்கள்,  குறிப்பாக இந்திய வாக்காளர்களின் ஆதரவு ம.இ.காவின் பக்கம் திரும்பிவுள்ளது.
      அம்னோ, கெராகான், ம.சீ.ச, மை.பி.பி.பி பொன்ற கட்சிகளுடன் இணைந்து அரசு சாரா இயக்கங்களும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன.
எதிர்க்கட்சியின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக வாக்காளர்கள் மீண்டும் மாற்றத்தை எதிர்ப்பார்க்கின்றனர் என பத்து கவான் ம.இ.கா தொகுதி நம்புவதாக அதன் தலைவர் சூ.இராமலிங்கம்  தெரிவித்தார்.
       சேவை மனப்பான்மையுள்ள  வேட்பாளருடன் களம் இறங்கி வெற்றிக் கனியை பறிப்பதே தொகுதி பொறுப்பாளர்களின் தற்போதைய தலையாய கடமையாகும் என்று நேற்று முன்தினம் நடந்தேறிய தொகுதியின் செயலவைக் கூட்டத்தில்  அவர் மேலும் கருத்துரைத்தார்.

Comments