நான் மைபிபிபி உறுபினர் இல்லை! டத்தோ சிவராஜ் மறுப்பு

நான் மைபிபிபி உறுபினர் இல்லை!
டத்தோ சிவராஜ் மறுப்பு

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 19-
        "நான்  மைபிபிபி உறுப்பினர் இல்லை. என் அரசியல் வாழ்க்கை 2005இல் மஇகாவில்தான் தொடங்கியது. ஆகையால், டான்ஸ்ரீ கேவியஸ் கூறுவதை  மறுப்பதாக மஇகா இளைஞர் பிரிவு தேசியத் தலைவர் டத்தோ சி.சிவராஜ் கூறியுள்ளார்.
          நான் மைபிபிபி உறுப்பினர் என்ற அறிக்கையை வெளியிடுவதற்கு முன் கேவியஸ் சிந்தித்திருக்க வேண்டும். என் அடையாள அட்டையை பயன்படுத்தி என்னை மைபிபிபியில் உறுப்பினராக சேர்த்திருக்கிறார்கள். நான் மைபிபிபி உறுப்பினராக வேண்டும் என்று சிந்தித்தது கிடையாது. இந்நிலையில் என்னை எப்படி மைபிபிபி உறுப்பினர் என்று கேவியஸ் கூறுகிறார் என்பது புரியவில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் சிவராஜ் தெரிவித்தார்.
         நான் கடந்த 2004இல் செனட்டர் டத்தோ டி.மோகன் மூலம் மஇகாவில் இணைந்து சேவையாற்றுனேன். கடந்த 2005இல் அதிகாரப்பூர்வ உறுப்பினராக மஇகாவில் இணைந்தேன். கடந்த 2013 பொதுத்தேர்தலில் ஈப்போ புந்தோங்கில் நான் போட்டியிட்ட போது கேவியஸ் எங்கே போனார்? நான் மஇகாவில் தேசிய இளைஞர் பிரிவு தலைவராக வந்த போது கேவியஸ் எங்கே போனார்?. நான் கேமரன்மலை தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்று தெரிந்தவுடன் நான் மைபிபிபி உறுப்பினர் என்று கூறுவது அவரது உள்நோக்கம்தான் என்ன என்னும் கேள்வியை எழுப்பியுள்ளதாக சிவராஜ் சொன்னார்.
           கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதி மைபிபிபிக்கு கிடைக்கவில்லை என்றால் தேசிய முன்னனியில் இருந்து வெளியேறுவோம் என்று தேசிய முன்னனியை மிரட்டுவது  முறையல்ல. இது தேர்தல் காலம். இத்தேர்தல் மிகவும் சவால்மிக்க தேர்தல் என்பதால் தேசிய முன்னனியை வெற்றி பெறச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து இந்த நேரத்தில் தேசிய முன்னனிக்கு பாதிப்பை ஏற்படுத்து அறிக்கைகளை வெளியிடுவதை கேவியஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் சிவராஜ் கேட்டுக் கொண்டார்.
          நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். கேமரன்மலை மஇகா  தொகுதி. அதன் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் இலக்கு இதுதான். அதேநேரத்தில் மைபிபிபி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று டத்தோ சிவராஜ் குறிப்பிட்டார்.

Comments