துபாயில் திடீர் மரணமடைந்த தங்கரத்தினம் விவகாரம்! டாக்டர் சுப்பிரமணியம் இன்றுவரை அனுதாபம் தெரிவிக்க வராதது வருத்தமே!

துபாயில் திடீர் மரணமடைந்த தங்கரத்தினம் விவகாரம்!
டாக்டர் சுப்பிரமணியம் இன்றுவரை அனுதாபம் தெரிவிக்க வராதது வருத்தமே!
-மனைவி கெத்ரூட்  

செய்தியாளர் :
 குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 5-
           துபாய் அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு திடீர் மரணமடைந்த மலேசியாவைச் சேர்ந்த தங்கரத்தினம் தியாகராஜன் (வயது 53) என்பவரின் உடலை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு மஇகா மக்கள் சேவை மையம் அலட்சியம் காட்டிய வேளையில் மஇகா தேசியத் தலைவர் என்னை பார்க்க வராதது வருத்தமே என்று அவரது மனைவி கெர்துருட் கூறியுள்ளார்.
        கடந்த 53 நாட்களாக அவரது உடல் துபாய் மருத்துவமனை சவக்கிடங்கில் அல்லல்பட்டு வந்த தங்கரத்தினம் உடல் கடந்த வாரம் மஇகா பொருளாளர் வேள்பாரி, துன் டாக்டர் சாமிவேலு மூலம் மலேசியா கொண்டு வரப்பட்டு முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. 
         துபாய் நாட்டிற்கு வர்த்தக விஷயமாக கடந்த 8 மாத்த்திற்கு முன்பு சென்ற தன் கணவர் மூளை பிரச்சினை தொடர்பில் துபாய் அரசாங்க மருத்துவமனையில் ஜனவரி 12ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பிப்ரவரி 5ஆம் தேதி மரணமடைந்தார். தன் கணவரின் சடலத்தை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் அவர்களை சந்திக்க முயற்சி மேற்கொண்டேன். ஆனால், மஇகா சேவை மையம் அவரை பார்க்க விடவில்லை. மாறாக கோப்புகளை மட்டும் வாங்கிக் கொண்டு கடைசி வரையில் உதவி வழங்கவில்லை.
          நான் சுகாதார அமைச்சர் என்ற நிலையில் டாக்டர் சுப்பிரமணியத்தை சந்திக்க விரும்பினேன். அப்படியே அவரை பார்க்கவிடவில்லை என்றாலும் மஇகா சேவை மையம் இப்பிரச்சுனைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், நான் சேவை மையத்திற்கு சென்றது முதல் எந்தத் தீர்வும் இல்லை. மாறாக வேள்பாரி உதவினார் என்று கெர்துருட் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
           இந்நிலையில் மஇகா தேசியத் தலைவர், இந்தியத் தலைவர், சுகாதார அமைச்சர் என்ற நிலையில் என்னை சந்திப்பார் என்று பெரிதும் எதிர்ப்பார்த்தேன். என் கணவர் உடல் மலேசியா வந்த பிறகாவது வருவார் என்று நினைத்தேன். ஆனால், அவர் வரவில்லை. அவர் அனுதாபத்தின் பேரிலாவது வந்திருக்கலாம்.  ஆனால், அவர் வராத து வருத்தமே என்று கெத்ரூட் சொன்னார்.

Comments