பாகான் டாலாமில் ஜெ.தினகரன் போட்டி டத்தோ டி.மோகன் களம் இறங்கி ஆதரவு!

பாகான் டாலாமில் ஜெ.தினகரன் போட்டி
டத்தோ டி.மோகன் களம் இறங்கி ஆதரவு!

பினாங்கு ஏப்ரல் 29- 
      மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் மிஃபாவின் துணைத்தலைவருமான ஜெ.தினகரன் பாகான் டாலாமில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
சமுதாய சேவையாளராக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள இவருக்கு ஆதரவாக  மஇகாவின் உதவித்தலைவரும், மிஃபாவின் தலைவருமான செனட்டர் டத்தோ டி.மோகன் களம் இறங்கி இந்த தொகுதியில் இவர் வெற்றி பெற மஇகாவினர் கடுமையாக உழைக்க வேண்டுமென  கேட்டுக்கொண்டார்.
      இந்த தொகுதியில் கடுமையான போட்டி நிலவினாலும் இவரின் சேவை வெற்றியை தேடித்தருமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
     இந்த தொகுதியில் மாற்றம் வேண்டுமென்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள் அதன் அடிப்பைடையில் ஜெ.தினகரன் வெற்றி பெற்றால் இந்த தொகுதியில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.
      ஜெ.தினகரன் குறிப்பிடுகையில் மஇகாவின் தேசியத்லைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க இந்த தொகுதியில் ஒருங்கிணைப்பாளராக எனது சேவையை பிரதிபலித்தேன். அதனையடுத்து போட்டியிடவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வெற்றிக்காகவும், இந்த தொகுதி மக்களுக்காகவும் கடுமையாக உழைப்பேன் என்றார் அவர்.
   மலேசியத்திருநாட்டில் 14ஆவது பொதுத்தேர்தல் கடுமையானதாக எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் பாகான் டாலாம் தொகுதியில் கடுமையான போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments