மஇகா தொகுதிகளுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவே மரியாதை சந்திப்பு! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தகவல்

மஇகா தொகுதிகளுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவே மரியாதை சந்திப்பு!
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தகவல்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 7-
            நாடு தழுவிய நிலையில் இருக்கும் மஇகா தொகுதி, கிளைத் தலைவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவே
நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் அவர்களை மரியாதை நிமித்தம் சந்திப்பதாக மஇகா உதவித் தலைவர் டான்ஸ்ரீ  எஸ்ஏ.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.
           மஇகா தொகுதித், கிளைத் தலைவர்களை சந்திக்க எல்லா நேரத்திலும் வாய்ப்பு கிடைக்காது.
அந்த வகையில் என்னால் முடிந்தவரையில் நாடு தழுவிய நிலையில் பயணம் செய்து அவர்களை சந்தித்து வருகிறேன்.
அதேநேரத்தில் நாடாளுமன்றத்திற்கு மரியாதை நிமித்தம் என்னை சந்திக்க வரும்
மஇகா தலைவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் தொடர்ச்சியாக அவர்களை சந்தித்து
வருவதாக தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு செய்தியில் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
           ஒரு காலத்தில்  நாடாளுமன்றத்திற்கு இந்தியர்கள் அதிகம் செல்ல முடியாத சூழல் இருந்தது.
ஆனால், டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் மேலவைத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட பிறகு அதிகமான இந்தியர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தருகின்றனர்.
இதில் குறிப்பாக ம இ கா தொகுதி, கிளைத் தலைவர்கள் அதிகம் வருகை தருகின்றனர்.
இவர்கள் டான்ஸ்ரீ எஸ்ஏ.விக்னேஷ்வரன் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து வருகின்றனர்.
        அந்த வகையில் கோல கங்சார் மஇகா தொகுதி, பகாங் மகளிர் பிரிவு, ஜொகூர், கூலாய் மஇகா


தொகுதியைச் சேர்ந்த தலைவர்கள் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அவர்களை மரியாதை நிமித்தம்
சந்தித்து கலந்துரையாடல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments