செந்தோசா சட்டமன்றத் தொகுதி இந்திய மக்கள் மேம்பாட்டிற்கு பாடுபடுவேன்!கெஅடிலான் சார்பில் போட்டியிடும் குணராஜ் உறுதிமொழி!

செந்தோசா சட்டமன்றத் தொகுதி இந்திய மக்கள் மேம்பாட்டிற்கு பாடுபடுவேன்!கெஅடிலான் சார்பில் போட்டியிடும்  குணராஜ் உறுதிமொழி!

குணாளன் மணியம்

கிள்ளான், ஏப்ரல் 26-
          கிள்ளான், செந்தோசா சட்டமன்றத் தொகுதி மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபடவிருப்பதாக அத்தொகுதியில் கெஅடிலான் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ.குணராஜ் வாக்குறுதியளித்துள்ளார்.
          மக்கள் சேவைக்கு  முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டியிடுகிறேன். செந்தோசா சட்டமன்றத்தில் இந்தியர்கள் 22 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள்.
இப்பகுதியில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காணவிருப்பதாக  அரசியலில் 18 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ள குணராஜ் தெரிவித்தார்.
           செந்தோசா தொகுதி முன்பு ஸ்ரீ அண்டலாஸ் என்று அழைக்கப்பட்டது.
இத்தொகுயில் மொத்தம் 51 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை 22 ஆயிரம். மலாய்க்காரர்கள் 8,600 பேரும் சீனர்கள் 16 ஆயிரம் பேரும் இருக்கின்றனர். இத்தொகுதியில் முன்பு சேவியர் ஜெயகுமார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். குணராஜ் செந்தூல, காசிபிள்ளை ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் தலைவராக  இருந்துள்ளார். தற்போது ரவாங், கன்றி ஹோம்ஸ் சுப்பிரமணியர் ஆலயத் தலைவராக இருந்து வருகிறார். செந்தூல் ரோட்டரி கிளப் தலைவராகவும் டத்தோ வைத்திலிங்கம் தலைமைத்துவத்தில் ஆலய பொறுப்பாளராகவும் தைப்பூசம் நடவடிக்கை குழுத்தலைவராகவும் எம்சிஐஎஸ் காப்புறுதி கூட்டுறவில் இயக்குநராகவும் இருந்து செயல்பட்டு வருகிறார்.
செந்தோசா தொகுதி கெஅடிலான் கட்சியின் சார்பில் முதல் முறையாக போட்டியிடும் குணராஜ் மக்கள் சேவையில் நீண்ட காலம் அனுபவம் கொண்டவர். கெஅடிலான் கட்சியின் செலாயாங் தொகுதி துணைத் தலைவராக இருந்து வரும் குணராஜ் கடந்த 2009 தொடங்கி 2016ஆம் ஆண்டு வரையில் செலாயாங் நகராண்மைக்கழக உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். குறிப்பிடத்தக்கது.

Comments