சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் பிரகாஷ்ராவ் தீவிரப் பிரச்சாரம்!

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் பிரகாஷ்ராவ் தீவிரப் பிரச்சாரம்!

குணாளன் மணியம்

சுங்கை பூலோ ஏப்.30-   
       சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில்  நான்கு முனைப் போட்டி
நிலவுகிறது என்றாலும் அத்தொகுதியை நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்
(பி.கே.ஆர்) ஆர்.சிவராசாவிடமிருந்து மீட்டெடுக்க தேசிய முன்னனி வேட்பாளர் பிரகாஷ்ராவ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
     பிரகாஷ் ராவ் தனது ஆதரவாளர்களுடன் சுங்கை பூலோவை கைப்பற்றுவதற்காக போராட்டம் நடத்தி வருகிறார்.
இத்தொகுதியில் பலத்த போட்டி நிலவினாலும்  வெற்றிக்கான இலக்கை நோக்கி ஒருமித்த வியூகங்களோடு
தமது போராட்டத்தை முடுக்கி விட்டுள்ளார் பிரகாஷ்ராவ்.


Comments