ஈஜோக் தொகுதியில் பார்த்திபனுக்கு பதில் புனிதன்! முக்கிய மஇகா தலைவர்கள் ஆதரவு! டாக்டர் சுப்பிரமணியம் முடிவு என்ன?

ஈஜோக் தொகுதியில்
பார்த்திபனுக்கு பதில் புனிதன்!
முக்கிய மஇகா தலைவர்கள் ஆதரவு!
டாக்டர் சுப்பிரமணியம் முடிவு என்ன?

செய்தியாளர் :
 குணாளன் மணியம்

ஈஜோக், ஏப்ரல்.7-
         மலேசிய மக்கள் குறிப்பாக இந்தியர்கள் தேர்தல் எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈஜோக் தொகுதியில் போட்டியிடும் மஇகா வேட்பாளர் பார்த்திபனுக்கு பதில் புனிதனாக இருக்க வேண்டும் என்று சில  முக்கிய மஇகா தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
       பார்த்திபன் வேட்பாளராக போட்டியிட்டால் மஇகா வெற்றி பெறுவது கடினம் என்று வட்டார மஇகா கருத்து தெரிவித்துள்ளது தேசம் வலைத்தளம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
        கோலசிலாங்கூர் நாடாமன்றத் தொகுதியில் ஈஜோக் சட்டமன்றம் மஇகாவிற்கு முக்கியமான இடமாகும். இத்தொகுதியில் மஇகா  வேட்பாளர்கள் அடிக்கடி மாறிக் கொண்டிருப்பதால் இத்தொகுதி ஒரு மர்மமான தொகுதியாகவே இருந்து வருகிறது.
         இந்நிலையில் இத்தொகுதியில் பார்த்திபன் பெயர் வேட்பாளராக பேசப்பட்டது. இப்போது புனிதன் பெயர் வலுவாக பேசப்படுகிறது. இதனால் பார்த்திபன் கடுப்படைந்துள்ளதாகத் தெரிகிறது. எனினும் ஈஜோக் மக்கள் குறிப்பாக இந்தியர்கள் பார்த்திபனை விரும்பவில்லை. இதில்  பார்த்திபன்  பல சிக்கல்களில் இருப்பதால் கட்சித் தலைமை அவருக்கு பதில் புனிதன் பரமசிவன் என்பவரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று அறியப்படுகிறது. புனிதன் இளைஞர். இளைஞர் அணியில் தகவல் பிரிவில் பொறுப்பாளராக இருந்து வருகிறார். ஈஜோக்கில் மஇகா வெற்றி பெற வேண்டுமானால் புனிதன் போன்ற இளைஞர்கள் போட்டியிட வேண்டும். ஈஜோக் தொகுதிக்கு புதுமுகம் அவசியம் என்பது மக்கள் கருத்து. பார்த்திபன் போட்டியிட்டால் மஇகா வெற்றி பெறுவது கடினம் என்று மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
          புனிதன், பார்த்திபன். இருவரில் யார் வேட்பாளர்? வட்டார ம இ கா யாரை ஆதரிக்கிறது என்பது குறித்து தேசம் ஒரு அலசல் தடத்தியது. இதில் பத்தாங் பெர்ஜுந்தை வட்டார மூத்த ம இ கா தலைவர்கள் சிலரை அணுகி கேட்ட போது அவர்கள் பார்த்திபனை விரும்பவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
       இந்நிலையில் பார்த்திபன் தேர்ந்தெடுக்கப்பட்டால் வெற்றி பெறுவது கடினம் என்று கூறப படுகிறது. ம இ கா மூத்தத் தலைவர் திருமூர்த்தி, முத்துப்பிள்ளை, தொகுதித் தலைவர் ஜீவா, நாகப்பன் ஆகியோர் புனிதனுக்கு ஆதரவளிப்பது தெரியவந்துள்ளது. இத்தொகுதியில் ஒரு இளைஞர் போட்டியிட்டால் மக்கள் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். இதன்வழி வெற்றி பெறலாம் என்பது இவர்கள் கருத்து. ஆகையால், கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments