மலேசிய வரலாற்றில் முதல் முறையாக மஇகாவின் தேர்தல் கொள்கை அறிக்கை!இந்திய சமுதாயத்தின் பொருளாதார நிலையை உயர்ந்த் திட்டங்கள் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தகவல்

மலேசிய வரலாற்றில் முதல் முறையாக மஇகாவின் தேர்தல் கொள்கை அறிக்கை!இந்திய சமுதாயத்தின் பொருளாதார நிலையை உயர்ந்த் திட்டங்கள்
டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தகவல்

செய்தியாளர் :
 குணாளன் மணியம்
கோலாலம்பூர், ஏப்ரல் 19-
         மலேசிய வரலாற்றில் இந்தியர்களின் பொருளாதார நிலையை உயர்த்த மஇகா முதல் முறையாக தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
 
        இந்தத் தேர்தல் கொள்கை அறிக்கையின்படி அடுத்த  10 ஆண்டுகளில் இந்தியர்களின் பொருளாதார நிலையை உயர்த்த பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தவிருப்பதாக மஇகா தேசியத் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் கூறினார்.
        இதில் மை டிபோசிட் திட்டத்தின் கீழ் வீடு வாங்குதல், பி40 இந்திய குடும்பங்களுக்கு இ-காசே திட்டம்,
ஏழை குடும்பங்களுக்கு மை காசே திட்டம், தனித்து வாழும் தாய்மார்களுக்கான உதவித் திட்டம், இந்திய குழந்தைகளுக்கு மழலையர் கல்வித் திட்டம், பல்கலைக்கழகம் நுழைய இந்திய மாணவர்களுக்கு உதவுதல், இளைஞர்களுக்கான தொழில்திறன் கல்வி, தமிழ்ப்பள்ளிகளில் நவீன கல்வித் திட்டம், அரசாங்க வேலை வாய்ப்பு,
இந்திய தொழில்முனைவர்களுக்கான பயிற்சி, தெக்கூன், அமானா இக்தியார் மலேசியா, எஸ்எம்இ கோர்ப் திட்டங்கள், அரசாங்க வேலை வாய்ப்பு, இளைஞர்களுக்கான விவசாய பயிற்சித் திட்டம்,
இந்தியர்களுக்கு கடனுதவி வழங்க கூட்டுறவு கடனுதவித் திட்டம் என்று பல திட்டங்களை தாங்கள்


அமல்படுத்தவிருப்பதாக டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
         இதனிடையே ம இ கா வேட்பாளர் பட்டியல் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அது அறிவிக்கப்படும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Comments