இந்தியர்கள் வர்த்தகத் துறையில் சாதனை படைக்க வேண்டும்! ஐபிஎஃப் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

இந்தியர்கள் வர்த்தகத் துறையில் சாதனை படைக்க வேண்டும்!
ஐபிஎஃப் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், ஏப்ரல் 14-
         ஒரு காலத்தில் உடல் உழைப்பு தொழிலில்  மட்டுமே ஈடுபட்டு வந்த  இந்தியர்கள் வர்த்தகத் துறையில் சாதனை படைத்து வருகின்றனர்.
இந்த சாதனை பனமடங்கு அதிகரிக்க வேண்டும்  என்று ஐபிஎஃப் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
        இந்தியர்கள் வெறும் சில்லறை வியாபாரத்தை மட்டுமே நம்பியிருக்காமல் உலகமயமாதல், இணைய வர்த்தகம் என எட்டியிருக்கிறார்கள். ஆகையால், இந்தியர்கள் மாறுபட்ட வகையில் நவீன வியாபாரத்தில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்று செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் தெரிவித்தார்.
          இந்தியர்கள் பல்வேறு துறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தங்களின் வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்து கொள்ள வேண்டும். நமது சமுதாயம் வலிமையும் வளமும்மிக்க சமுதாயமாக விளங்கிட அனைவரும் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும் என்று டத்தோ எம்.சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.

Comments