புதிய சிந்தனையோடு செயல்பட்டு ஐக்கியத்தை வலுப்படுத்துவோம்! டத்தோஸ்ரீ எம்.சரவணன் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

புதிய சிந்தனையோடு செயல்பட்டு ஐக்கியத்தை வலுப்படுத்துவோம்!
டத்தோஸ்ரீ எம்.சரவணன் சித்திரைப் புத்தாண்டு  வாழ்த்து

கோலாலம்பூர், ஏப்ரல் 14-
        புதிய சிந்தனையோடு செயல்பட்டு ஐக்கியத்தை வலுப்படுத்துவோம் என்று நாம் தோற்றுநர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
     இந்தியர்கள் அனைவருக்கும் தங்கள் எண்ணத்தில் புதிய சிந்தனையை விதைத்து ஐக்கியத்தை வலுப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் சமயம், சமூகம், கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றிலும் அதிக ஈடுபாட்டோடு இருக்க வேண்டும். நம் சமுதாய ஒற்றுமையையும் எதிர்காலத்தையும் கருதில் கொண்டு, இந்தியர்களின் நலனுக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.
      நாம் எந்த காரியத்திலும் தெளிவான சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும். இந்த சிந்தனையின் அடிப்படையிலேயே அரசாங்கம் வழங்கக்கூடிய சலுகைகளைப் பயன்படுத்தி கல்வி, பொருளாதாராம், வாழ்வாதாரம் அனைத்திலும் முன்னேற்றம் கண்ட சமுதாயமாக உருமாற்றம் காண வேண்டும்.
     நம் நாட்டில் இந்நாட்டில் இருக்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, சீக்கியர் ஆகியோர் வேறுபாடுகளைக் களைந்து, எல்லா நிலையிலும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய உந்து சத்தியாகத் திகழ வேண்டும். நாம் ஒரே குரலில், ஒரே நோக்கத்தில் செயல்பட வேண்டும். நாம் ஒரே குரலில் இயங்கினால்தான் இந்நாட்டில் இந்தியர்களின் உரிமைகளையும் தேவைகளையும் நிலைநிறுத்த முடியும் என்று வலியுறுத்திய டத்தோஸ்ரீ எம்.சரவணன் இந்துக்கள் அனைவருக்கும் இந்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார்.

Comments