மிஃபா விவகாரத்தில் எதிர்கட்சி இந்தியத் தலைவர்களோடு நட்புமுறையில் கருத்து பரிமாற்றம்!

மிஃபா விவகாரத்தில் எதிர்கட்சி இந்தியத் தலைவர்களோடு நட்புமுறையில் கருத்து பரிமாற்றம்!

    கோலாலம்பூர், 4- 
           மலேசிய இந்திய இளைஞர்களுக்கு  காற்பந்துத்துறையின் வழி பொருளாதாரத்தை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதே மிஃபாவின் நோக்கம். அந்த நோக்கத்தை நட்புமுறையில்  பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர்  சிவக்குமார் உள்ளிட்ட எதிர்கட்சி இந்தியத் தலைவர்களோடு பகிர்ந்து கொண்டோம் அதனைவிடுத்து அவர்களிடம் அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சிகள் இல்லை.  அதே வேளையில் மிஃபாவின் நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருவதை அவர்கள் வரவேற்று உள்ளார்கள்.மேலும் இணைந்து வேலை செய்யவும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என மிஃபாவின் தலைவரும், செனட்டருமான டத்தோ டி.மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
      செடிக் மானியங்கள் குறித்து நாடாளுமன்றத்தில்  கேள்வி எழுந்த நிலையிலும், மிஃபாவும் செடிக் வழி பயன்பட்ட நிலையிலும், மிஃபாவின் மீது தவறான கண்ணோட்டத்தை தாங்கிய கருத்துக்கள்  வருத்தம் அளித்த வேளையில் எங்களின்  நிலைப்பாட்டிலான விளக்கத்தை அளித்தோம் என்றார் அவர்.
      அதுமட்டுமில்லாது அவர்களின் நிலைப்பாட்டில்  செடிக் குறித்து கேள்வி எழுப்பியதன் தொடர்பில்  விளக்கம் அளித்தனர். மேலும்  மிஃபாவின் மீது எந்தவிதமான விரோதமும் இல்லையெனவும் தெளிவுபடுத்தினர்.
      இவ்வாறாக இரு தரப்பினரிடையே சுமூகமான முறையில் ஒரு நல்லதொரு கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. மேலும்  இதில் அரசியல் ரீதியாக யார் பெரியவன் என்ற பாகுபாடும் இல்லை.
     அப்படி இருக்கையில்  தவறான கண்ணோட்டத்தில் சிலர் இந்த விவகாரத்தை திரித்து கூறுவதினால் இரு தரப்புகளுக்கு மத்தியிலான நட்பு பாதிக்கப்படுகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட தரப்பினர் இதனை  புரிந்து கொள்ள வேண்டுமென  டத்தோ டி.மோகன் தமதறிக்கையில்  தெளிவுபடுத்தியுள்ளார்.

Comments