இந்திய சமுதாயத்தில் புதுமை உண்டாகட்டும்! செனட்டர் டத்தோ டி.மோகன் புத்தாண்டு வாழ்த்து

இந்திய சமுதாயத்தில் புதுமை உண்டாகட்டும்!  
செனட்டர் டத்தோ டி.மோகன் புத்தாண்டு வாழ்த்து

    கோலாலம்பூர், ஏப்ரல் 14-
         பல இன மக்கள் வாழ்ந்து வரும்  நமது மலேசியத் திருநாட்டில்  நாம் அனைவரும்  இன்பமுற்று ஒற்றுமையோடு  வாழும் நிலைத்தன்மை நிலைத்திருக்கும் வண்ணம் இந்த சித்திரைப்  புத்தாண்டு பிறக்கட்டும் என்று மஇகா தேசிய உதவித்  தலைவர்  செனட்டர் டத்தோ டி.மோகன் கூறினார்.
       சமுதாயமும்,  நாடும் மென்மேலும் வளர்ச்சி நிலையை எட்டட்டும். இனம், மதம், பேதங்கள் கடந்து நாம் அனைவரும் மலேசியர்களாக வாழ்வதை  உறுதி செய்யும்  அதே நேரத்தில்
தேசிய நீரோடையில் நமது சமுதாயத்தினரும் பங்கெடுத்து கல்வி, விளையாட்டு, பொருளாதாரம் என அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி நிலைகளை எட்ட வேண்டும் என்று டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.
       நமக்கான வாய்ப்புக்களை பயன்படுத்தி  புதுமைகள் பல படைப்போம் என்பதனை மனதில் தாங்கி பயணிப்போம்.  அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்  என டத்தோ டி.மோகன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Comments