தொழிலாளர்களின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் உணர்வையும் மதிப்போம்! செனட்டர் டத்தோ டி.மோகன் தொழிலாளர் தின வாழ்த்து

தொழிலாளர்களின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் உணர்வையும் மதிப்போம்!
செனட்டர் டத்தோ டி.மோகன் தொழிலாளர் தின வாழ்த்து

கோலாலம்பூர், மே 1- 
தொழிலாளர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பு உணர்வையும் மதிப்போம் என்று மஇகா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் வலியுறுத்தியுள்ளார்.         
                உலகத் தொழிலாளர்கள்  அனைவருக்கும் உரித்தான நாளாக மே மாதம் முதல் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடப் படுவதோடு தொழிலாளர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பு உணர்வையும் உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது.
உலக வாழ் தொழிலாளர்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மனமகிழ்ச்சி கொள்கிறேன்.
        உழைப்பால் மட்டுமே உயர்வு காண முடியும், மன நிறைவு அடைய முடியும், இதுவே ஒளிமயமான எதிர்காலத்துக்கும் வழி வகுக்கும். மிக முக்கியமாக உயர்வுக்கு ஊன்றுகோலாக நம்மிடம் உழைப்பும், உண்மையும் நிலைத்திருக்க வேண்டும். பலரின் உயர்வுக்கு ஏணியாக தொழிலாளர்களின் உழைப்பு இருந்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
       உலக வளர்ச்சிக்கும் குறிப்பாக நமது நாட்டின் வளர்ச்சிக்கும் உழைப்பாளர்களின் வியர்வை துளிகள் இருந்து வரும் வேளையில் அவர்களுக்கு நன்றி பாராட்டும் விதமாகவும், உழைப்பின் உன்னதத்தை உணர்த்தும் வண்ணமும் இந்த நன்னாளை வரவேற்போம். நமது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தொழிலாளர்களை நினைத்துப்பார்ப்போம் என டத்தோ டி.மோகன் தெரிவித்துள்ளார்.

Comments