பிறை தொகுதியை பகாதானிடமிருந்து மீட்டெடுப்போம். பாரிசான் வேட்பாளர் மு. சுரேஷ் சூளுரை.

பிறை தொகுதியை பகாதானிடமிருந்து மீட்டெடுப்போம்.
பாரிசான் வேட்பாளர் மு. சுரேஷ் சூளுரை.

பத்து கவான், மே 1-
       பத்து கவான் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட  பிறை சட்டமன்ற தொகுதியை கடந்த இரண்டு தவணையாக பகாதான் ஆட்சி செய்து வருகின்றது.
     இத்தொகுதியில் டி.ஏ.பி வேட்பாளர் பேராசிரியர் பி. ராமசாமியுடன் ம.இ.கா வேட்பாளர் மு.சுரேஸ் களம் காண்கிறார். பகாதான் வேட்பாளரிடமிருந்து இதுவரை  எந்தவொரு பெரிய எதிர்ப்பும் கிளம்பாத நிலையில், ம.இ.கா தன்னகத்தே தனது சேவையை வழங்கி வருகின்றது.
அந்த வகையில் ம.இ.காவின் சுரேஸ் முனியாண்டி வேட்பாளராக தேர்வு பெறுவதற்கு முன்னமே, ஐவர் கொண்ட குழுவின் செயலாளராக பணியாற்றி மக்களிடையே  நற்பெயரை பெற்றுக் கொண்டார். பிறை வட்டாரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பேரிடரில் சுரேஸ் மற்றும் தொகுதி ம.இ.காவினர் பம்பரமாக பணியாற்றியதன் வழியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள் முதல் தேவைக்கேற்ற வகையில் பொருளுதவிகள் வழங்கியதன் பேரில் வாக்காளர்களின் அபிமானத்தை பெற முடிந்தது.
      தொகுதி மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு உடனடி தீர்வு காண்பதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
கம்போங் மானிஸ் குடியிருப்பு பகுதியில் குப்பை தொட்டியை பழுது பார்க்கக்கூட நேரம் கிடைக்காத ஆளும் கட்சியினரின் மெத்தனப்போக்கை அறிந்து அங்குள்ள ம.இ.கா கிளையினரின் ஆதரவுடன் புதிய குப்பைத் தொட்டி மற்றும் கற்சுவர் கட்டித்தர உதவினார்.
விநாயகர் ஆலயத்தை இந்து அறப்பணி வாரியம் மூலம் கையடக்கப்படுத்தியது மற்றும் கம்போங் மெயின் ரோட் குடியிருப்பு நிலப்பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருந்து வருவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சனைகள்,
இப்படி பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தொடர் போராட்டங்களை சந்திந்து வாக்காளர் மட்டுமல்லாது பொது மக்களின் பேராதரவினையும் பெற்று நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார் பிறை சட்டமன்ற வேட்பாளர் சுரேஷ் முனியாண்டி.
     தேர்தல் நெருங்க நெருங்க, வாக்காளர்கள் தாங்களே முன்வந்து ஆதரவு தெரிவிப்பது குறித்து தாம்  மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்தார்.
இந்தியர்கள், மலாய்காரர்களின் அபிமானத்துடன் களம் கானும் சுரேஷ்   ஆறுமுனை போட்டியை எதிர்நோக்குகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments