எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் மூன்றாவது தமிழ் வானொலி! என் ஆதரவு துன் மகாதீருக்குத்தான்! தீவிர பிரச்சாரத்தில் இறங்குவேன்! ஃபங்கி சங்கர் சூளுரை

எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் மூன்றாவது தமிழ் வானொலி!
என் ஆதரவு துன் மகாதீருக்குத்தான்!
தீவிர பிரச்சாரத்தில் இறங்குவேன்!
ஃபங்கி சங்கர் சூளுரை

செய்தியாளர் :
 குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 13-
      நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் துன் டாக்டர்  மகாதீர் தலைமையிலான நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு வழங்கவிருப்பதாக இசை எஃப்எம் தோற்றுநர், தலைமை இயக்குநர் ஃபங்கி சங்கர் கூறியுள்ளார்.     
        தேசிய முன்னனி தலைவர்களிடம் கேட்டு கேட்டு அழுத்துப் போய் விட்டது. நான் 17 ஆண்டுகள் துன்பப்பட்டு விட்டேன். இனியும் சிரமப்பட  விரும்பவில்லை.
என் ஆதரவு துன் மகாதீருக்குத்தான். எதிர்வலும் பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு வழங்க முடிவு செய்திருக்பிறேன்.
தீவிர பிரச்சாரத்தில் இறங்குவேன் என்று
ஃபங்கி சங்கர் சூளுரைத்துள்ளார்.
         நாட்டில் இந்தியர்களுக்காக இருப்பது 2 வானொலிகள்தான். மூன்றாவது வானொலி வழி மக்களுக்கு உதவ காத்திருக்கிறேன். இதற்காக பல அமைச்சுக்களின் அலுவலகப்படிகட்டுகளை ஏறி இறங்கியிருக்கிறேன். தேசிய முன்னனி தலைவர்கள் என் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இதனால் மனமுடைந்து விட்டேன். இந்நிலையில் நண்பர் எஸ்.கோபி கிருஷ்ணா மூலம் துன் டாக்டர் மகாதீர் அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நான் ஒரு கோரிக்கை மகஜரை அவரிடம் வழங்கினேன். "நான் கண்டிப்பாக கவனிக்கிறேன்" என்றார் துன் மகாதீர். பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி ஆட்சியமைத்து விட்டால் மூன்றாவது வானொலி லைசென்ஸ் கிடைத்துவிடும். இதனால் பல இந்திய கலைஞர்கள் பயனடைவார்கள் என்று ஃபங்கி தெரிவித்தார்.
          இன்னும் ஒரு வாரத்தில் துன் மகாதீர் வாக்குறுதி கடிதத்தை என்னிடம் வழங்கிய பிறகு நம்பிக்கை கூட்டணிக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்குவேன் என்று ஃபங்கி சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

Comments