மஇகா மட்டுமே இந்தியர் நலனை மாற்றியமைக்க முடியும்! பிரகாஷ்ராவ் சூளுரை

மஇகா மட்டுமே இந்தியர் நலனை மாற்றியமைக்க முடியும்!
பிரகாஷ்ராவ் சூளுரை

குணாளன் மணியம்

சுங்கை பூலோ, ஏப்.6-
             இந்தியர் நலனை மஇகா மட்டுமே கட்டிக் காக்க முடியும்  என்று சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி இந்தியர் நல ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்ராவ் கூறினார்.
          கடந்த 70 ஆண்டுகள் மஇகா மட்டுமே இந்தியர் நலனை காக்கும் ஒரு கட்சியாக இருந்து வந்தது. அதன் பிறகு சில காரணங்களுக்காக  கடந்த 10 ஆண்டுகள் சுபாங் தொகுதி எதிர்க்கட்சி வசமானது.
ஆனால், இந்தியர்களுக்கு ஒரு பயனும் கிடைத்த பாடில்லை. இனியும் கிடைக்கும் என்று எதிர்ப்பார்ப்பது தவறு.
ஆகையால், தற்போது சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியாக மாறிவிட்ட சுபாங் தொகுதியை மீண்டும் மஇகா வசம் கொண்டு வருவதற்கு இந்தியர்கள் மஇகா வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றியை நிலைநாட்ட வேண்டும்
என்று பண்டார் பாரு சுங்கை பூலோவில் ஐபிஎஃப் சுங்கை பூலோ தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்களுடன் ஒரு மாலை பொழுது விருந்து நிகழ்வில் பிரகாஷ்ராவ் தெரிவித்தார்.
        சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மஇகா மட்டுமே உதவி வருகிறது.
இதில் உதவ வேண்டியவர்கள் உதவி வழங்கவில்லை. ஆகையால், இந்தியர்கள் இனியும் ஏமாற கூடாது என்று பிரகாஷ்ராவ் கேட்டுக் கொண்டார்.
          சுபாங் மஇகா தொகுதி சார்பில் நாங்கள் ஏழை மக்களுக்கு நாங்கள் உதவி வருகிறோம். சுபாங் தொகுதியில் மஇகா தோல்வி கண்டிருந்தாலும் ்நாங்கள் தொடர்ச்சியாக உதவி வருகிறோம்.
சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு நாங்கள் உதவித் தயாராக இருக்கிறோம். ஆனால், மக்கள் எங்களைத் தேர்வு செய்ய வேண்டும். நாங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியர்களின் நிலைமையை மாற்றிக் காட்டுகிறோம் என்று பிரகாஷ்ராவ் சூளுரைத்தார்.
          இந்த நிகழ்வில் ஐபிஎஃப் கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன், டத்தோ ஜைன், சுபாங் மஇகா தொகுதித் தலைவர் சௌந்தராஜன்,  பொதுமக்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

Comments