இங்கிலாந்தில் காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கும் ஷோகம் மாநாடு! பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் பிரதிநிதியாக மலேசிய பேராளர் குழுவுக்கு தலையேற்று நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் இன்று லண்டன் பயணம்!

இங்கிலாந்தில் காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கும் ஷோகம் மாநாடு!
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் பிரதிநிதியாக மலேசிய பேராளர் குழுவுக்கு தலையேற்று நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் இன்று லண்டன் பயணம்!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 15-
         காமன்வொல்த் நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் பங்கேற்கும் ஷோகம் மாநாடு இங்கிலாந்தில் ஏப்ரல் 16 திங்கட்கிழமை தொடங்கி நடைபெறவிருக்கிறது.
இம்மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்பை பிரதிநிதித்து மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் மலேசிய பேராளர் குழுவுக்கு தலைமையேற்று இன்று ஏப்ரல் 15 லண்டன் பயணமானார்.
          இம்மாநாடு ஏப்ரல் 18ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி ஏப்ரல் 21ஆம் நாள் முடிவடைகிறது. பிரிட்டிஷ் காலனித்துவத்தில் இருந்த உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த 25ஆவது ஷோகம் மாநாட்டில் மலேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதித்து பங்கேற்கும் முதல் தமிழர் என்று மலேசிய, உலக வரலாற்றில் இந்த வருகை பதிவாகிறது.
         இந்த ஷோகம் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இம்மாநாட்டில் உலக நாடுகளின் காமன்வெல்த் நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்பாளர்கள். இம்மாநாட்டை மலேசிய அரசாங்கம் ஏற்று நடத்தியுள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டு ஏப்ரல் 16ஆம் நாள் தொடங்கி சிறப்பு விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.  இம்மாநாட்டில் பிரிட்டன் அரசியார், பிரதமர் திரேசா மே கலந்து கொள்கிறார்கள்.
         காமன்வெல்த் மாநாட்டை முன்னிட்டு ஏப்ரல் 16ஆம் நாள் பிரிட்டனுக்கான மலேசியத் தூதர் டத்தோ அமாட் ரஷிடி ஹஷிஷி, வட அயர்லாந்துக்கான மலேசிய தூதர் டத்தின் ரோஷிலாவத்தி அப்துல் ராஃபார் சிறப்பு விருந்துபசரிப்பு நல்குகிறார்கள். அதேநேரத்தில் ஏப்ரல் 18ஆம் நாள் பிரிட்டன் பிரதமர் திரேசா மே வழங்கும் வரவேற்பு விருந்துடன் ஷோகம் மாநாடு தொடங்கும். அதன்பிறகு பிரிட்டிஷ் அரசியார் பக்கிங்ஹம் அரண்மனையில் காமன்வெல்த் நாடுகளின் அரசாங்கத் தலைவர்களுக்கு விருந்துபசரிப்பு நல்குவார். இந்த விருந்துபசரில் மலேசிய பேராளர்களுக்கு தலைமையேற்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கலந்து கொள்வார்.
           பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதிநிதியாக காமன்வெல்த் மாநாட்டில் அரசாங்க உயர் அதிகாரிகளுடன் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments