மஇகா முன்னாள் மத்திய செயலை உறுப்பினர் டத்தோ ரகுமூர்த்தி விலகல்!

மஇகா முன்னாள் மத்திய செயலை உறுப்பினர் டத்தோ ரகுமூர்த்தி விலகல்!

கோலாலம்பூர், ஏப்ரல்.27-
     மஇகா தலைமைத்துவம் முடிவு செய்துள்ள  வேட்பாளர் பட்டியல் குறித்து அதிருப்தி கொண்டிருக்கலாம் என்று நம்பப்படும்  மஇகாவின் முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ காயத்திரி ரகு மூர்த்தி மஇகாவின் எல்லா பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளதாக  விலகிக் அறிவித்துள்ளார்.
       இந்தப் பதவி விலகல் கடிதத்தை டத்தோ ரகுமூர்த்தி மஇகா தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளார். அக்கடித்தில் மஇகாவின் உறுப்பினராக இருப்பதில் இருந்தும் கிள்ளான், ஜாலான் துங்கு கிளானா கிளைத் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மஇகா வழி சேவையாற்றுவதற்கு  வாய்ப்பளித்த கட்சித் தலைமைக்கு நன்றி கூறிக் கொள்வதாகவும் கட்சியின் எதிர்கால நலனுக்கு வாழ்த்துவதாகவும் தம்முடைய பதவி விலகல் கடிதத்தில் காயத்திரி ரகு மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
        எனினும் டத்தோ ரகுமூர்த்தி அக்கடிதத்தில் பதவி விலகலுக்கான காரணம் எதனையும் குறிப்பிடவில்லை.
        இந்நிலையில் இவ்விவகாலம் தொடர்பில் தேசம் மேற்கொண்ட ஆய்வில் பொதுத் தேர்தலுக்கான மஇகா வேட்பாளர் பட்டியல் குறித்து  ரகுமூர்த்தி அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கட்சி தலைமைத்துவம் மீது டத்தோ ரகுமூர்த்தி நம்பிக்கை இழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Comments