ஊடகங்கள் உண்மை நிலையை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும்! டத்தோஸ்ரீ எம்.

ஊடகங்கள் உண்மை நிலையை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும்!
டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆலோசனை

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்.4-
          ஊடகங்கள் உண்மை நிலையை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும் என்று இளைஞர், விளையாட்டுத் துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆலோசனை கூறியுள்ளார்.

          கடந்த காலங்களில் ஊடகங்கள் குறிப்பாக  பத்திரிகைகள் எந்த செய்தியை வேண்டுமானாலும்  வெளியிடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், இனிமேல் அப்படி செய்ய முடியாது என்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஊடகங்கள் தொடர்பான சட்டமசோதா குறித்து கருத்துரைக்கையில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ் சரவணன் தெரிவித்தார்.
       பொய் செய்திகளை பரப்புகிறவர்கள், அதனை வெளியிடுகிறவர்கள், அதனை பிரசுரிப்பவர்கள் என்ற நிலையில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 5 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இது தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி 123 எம்பிக்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாக டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.
         பொதுமக்கள் இந்த விவகாரத்தில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். அதேநேரத்தில்  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பொய்ச்  செய்தியை வெளியிடுவதை கண்காணிக்க வேண்டும். மேலும் ஊடகங்கள் குறிப்பாக பத்திரிகைகள் இந்த விவகாரத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் கேட்டுக் கொண்டார்.

Comments