துபாயில் திடீர் மரணமடைந்த தங்கரத்தினம் விவகாரம்! மஇகா சேவை மையம் மக்கள் நலனில் அக்கறை காட்டாதது வருத்தமளிக்கிறது! மனைவி கெர்துருட் வேதனை!

துபாயில் திடீர் மரணமடைந்த தங்கரத்தினம் விவகாரம்! 
மஇகா சேவை மையம் மக்கள் நலனில் அக்கறை காட்டாதது வருத்தமளிக்கிறது! 
மனைவி கெர்துருட் வேதனை!

செய்தியாளர் :
 குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 5-
           துபாய் அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு திடீர் மரணமடைந்த மலேசியாவைச் சேர்ந்த தங்கரத்தினம் தியாகராஜன் (வயது 53) என்பவரின் உடலை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு மஇகா மக்கள் சேவை மையம் அக்கறை காட்டாதது வருத்தமளிக்கிறது என்று அவரது மனைவி கெர்துருட் கூறியுள்ளார்.
         கணவரின் உடலை கடந்த வாரம் மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம், மஇகா பொருளாளர் டத்தோஸ்ரீ வேள்பாரி, துன் டாக்டர் எஸ் சாமிவேலு ஆகியோர் உதவி வழங்கியி்ருந்தனர்.
         என் கணவர் உடல் கடந்த வாரம் துபாய் மருத்துவமனையில் இருந்து மலேசிய கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில்  முன்னதாக மஇகா சேவை மையத்திற்கு உதவி நாடிச் சென்ற போது நான் சரளமாக ஆங்கிலம் பேசுவதாகவும் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் வசிப்பதாகவும் கூறி எனக்கு உதவி மறுக்கப்பட்டதோடு அதன் தலைவர் ஒரு தவறான குரல் பதிவையும் வெளியிட்டு என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் கெத்ரூட் சொன்னார்.
           இந்த விவகாரம் வாட்ஸ்ஆப், முகநூலில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து டத்தோஸ்ரீ வேள்பாரி உதவ முன் வந்தார். துன் சாமிவேலுவும் வேள்பாரியும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் வெள்ளியை செலுத்தி உடலை மலேசியா கொண்டு வந்தார்கள். ஆனால், ம இ கா மக்கள் சேவை மையம் ஆங்கிலம் பேசுகிறேன் என்ற காரணத்திற்காக உதவவில்லை. இது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக மலேசிய மக்கள் சேவை மையத்தின் தலைவர் டத்தோ மலர்விழி குணசீலன் ஏற்பாடு செய்திருந்த நன்றி தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கெத்ரூட் அவ்வாறு சொன்னார்.
        துபாய் நாட்டிற்கு வர்த்தக விஷயமாக கடந்த 8 மாத்த்திற்கு முன்பு சென்ற தன் கணவர் மஞ்சள் காமாலை பிரச்சினை தொடர்பில் துபாய் அரசாங்க மருத்துவமனையில் ஜனவரி 12ஆம் தேதி சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பிப்ரவரி 5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடலை கொண்டு வருவதற்கு மஇகா சேவை மையம்  உதவி வழங்காத நிலையில் டத்தோஸ்ரீ வேள்பாரி, துன் சாமிவேலு, டான்ஸ்ரீ கேவியஸ், பொது சேவை இயக்கங்கள் உதவி வழங்கியதாகவும் அவர்களுக்கு தாம் நன்றி கூறிக் கொள்வதாகவும் கெத்ரூட் தெரிவித்தார்.

Comments