நாளை நாடாளுமன்றம் கலைப்பு! ஒரு மாதத்தில் பொதுத்தேர்தல்! மீண்டும் ஆட்சி அமைப்போம்! பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் சூளுரை

நாளை நாடாளுமன்றம் கலைப்பு!
ஒரு மாதத்தில் பொதுத்தேர்தல்!
மீண்டும் ஆட்சி அமைப்போம்!
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் சூளுரை

செய்தியாளர் : 
 குணாளன் மணியம்

புத்ராஜெயா, ஏப்ரல் 6-
         நாட்டின் 14ஆவது  பொதுத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது பலரது கேள்வியாக இருந்த நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் புத்ராஜெயாவை தக்கவைத்துக் கொள்வோம் என்ற சூளுரையுடன் நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று புத்ராஜெயாவில் அறிவித்துள்ளார்.
          எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் வேளையில் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னனிதான் ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் திட்டவட்டமாகக் கூறினார்.
         பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வெள்ளிக்கிழமை காலையில் அரண்மனையில் பேரரசரை சந்தித்து அவரது ஒப்புதலை பெற்ற பிறகு புத்ராஜெயாவில் நாடாளுமன்ற கலைப்பு குறித்து அறிவிப்பு செய்தார்.
          இந்த 14ஆவது பொதுத்தேர்தல் தேசிய முன்னனி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஒரு சவால்மிக்க ஒரு தேர்தலாக அமைந்துள்ளது.
எல்லை மறுசீரமைப்புக்குப் பிறகு நடத்தப்படும் தேர்தல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments