வரலாறு படைத்த ஷா ஆலம் கம்போங் கருப்பையா மக்கள் சக்தி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திற்கு ரத்னவள்ளி அம்மையார், கணபதிராவ் வருகை

வரலாறு படைத்த ஷா ஆலம் கம்போங் கருப்பையா மக்கள் சக்தி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திற்கு ரத்னவள்ளி அம்மையார், கணபதிராவ் வருகை


ஷா ஆலம், ஏப்ரல் 17-
         ஆலய உடைப்பில் வரலாறு படைத்த ஷா ஆலம் கம்போங் கருப்பையா மக்கள் சக்தி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார்,
கணபதிராவ் அண்மையில் வருகை மேற்கொண்டதாக ஆலயத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான சகுந்தலா சுந்தர் தெரிவித்தார்.
         இந்த ஆலயத்தின் திருவிழா எதிர்வரும்  ஏப்ரல் 21ஆம் நாள் நடைபெறவிருக்கிறது.
இதனை முன்னிட்டு ஆலயத்தில் 10 நாட்கள் தொடர் உபயம் நடைபெற்று வருகிறது.
சித்திரைப் புத்தாண்டு தினத்தில் இந்த ஆலயத்திற்கு வருகை மேற்கொண்ட மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார், கணபதிராவ், ராமாஜி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு ஆலயத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.
       இந்த மக்கள் சக்தி மகா மாரியம்மன் ஆலயம் கடந்த 31.10.2018இல் உடைக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்ததால் இந்த ஆலயம் ஆலய உடைப்பில்  வரலாறு படைத்ததாக சகுந்தலா சொன்னார்.
        இந்த ஆலயத்திற்கு மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் நன்கொடை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments