அனைத்துலக அரங்கில் வர்த்தக ரீதியில் கால்பதித்தது மை இவன்ஸ்!

அனைத்துலக அரங்கில் வர்த்தக ரீதியில் கால்பதித்தது மை இவன்ஸ்!

கோலாலம்பூர், ஏப்.4-
          மலேசியாவில் பல நிகழ்ச்சிகளில் முக்கிய ஏற்பாட்டு நிறுவனமாக முத்திரை பதித்துள்ள மை இவென்ஸ் நிறுவனம் அனைத்துலக அரங்கில் வர்த்தக ரீதியில் கால்பதித்துள்ளது.
         ஒரு ஏற்பாட்டு நிறுவனமாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தகத்தை தொடங்கிய மை இவென்ஸ் நிறுவனம் இன்று அனைத்துலக அரங்கில் கால்பதித்துள்ளது.
        இதற்காக இந்தியா, சவூதி அரேபியா, நைஜீரிய போன்ற நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகளுடன் வர்த்தக ரீதியில் மை இவென்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அதன் தோற்றுநரும் தலைவருமான ஷாகுல் ஹமிட் தெரிவித்தார்.
          இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கண்ட நாடுகளுடன் விளையாட்டுத் துறை, கலைத்துறை, தொழில் துறை என்று பல துறைகளில் இருக்கும் வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்தவே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அவர் சொன்னார்.
        மை இவென்ஸ் நிறுவனம் தற்போது அமெரிக்கா, இயூஏஇ, இந்தியா ஆகிய நாடுகளில்  அலுவலகத்தைக் கொண்டுள்ளது. இதன்வழி பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் என்று ஷாகுல் ஹமிட் சொன்னார்.
          இந்த நிகழ்ச்சியில் இந்தியா, சவூதி அரேபியா, நைஜீரிய ஆகிய நாடுகளின் வர்த்தகப் பிரதிநிதிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மை இவென்ஸ் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இதனையொட்டி விருந்து நிகழ்வு ஒன்றும் நடைபெற்றது. இதில் மலேசிய, இந்திய வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். இந்த விருந்து நிகழ்வுக்கு சிலாங்கூர் துங்கு லக்சமணா துங்கு சுலைமான் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா சிறப்பு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments