ஆலய மேம்பாட்டுப் பணிகளுக்கு மானியம் வழங்க தேசிய முன்னணி தயக்கம் காட்டியதில்லை? பத்து கவான் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஜெயந்தி

ஆலய மேம்பாட்டுப் பணிகளுக்கு மானியம் வழங்க தேசிய முன்னணி தயக்கம் காட்டியதில்லை?
பத்து கவான் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஜெயந்தி 

சிம்பாங் அம்பாட், ஏப்.2,
       பத்து கவான் நாடாளுமன்ற தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஜெயந்தி வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்னமே தொகுதி வாக்காளர்களையும் பொது மக்கள் மற்றும் ஆலயங்களின் பொறுப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றார்.
செல்லும் இடங்கள் தோறும் மகத்தான வரவேற்பினை பெற்று நம்பிக்கை நட்சத்திரமாக தொகுதியில் உலா என்றால் அது மிகையில்லை.
     மூவின மக்களிடமும் சகஜமாக பழகி அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்திக்கும் வகையில் தன்னாலான செவைகளை மக்கள் முன்னெ வைக்கின்றார்.
கடந்த 10 வருடங்களாக இங்குள்ள ஆலயங்கள் எந்த ஒரு மானியங்களை பெற தவறியதை அறிந்து அவர் வேதனைப்படுவதாக தெரிவித்தார்.
இதில் குறிப்பாக இங்குள்ள முத்தாலம்மன் ஆலயம் திருப்பணி யில் சுமார் நான்கு ஆண்டுகளாக ஈடுப்பட்டுள்ளபோதும் இன்னும் மானிய பற்றாக்குறையால் 30 சதவிகித வேலை முற்றுப் பெறாதிருப்பதை அறிந்து தன்னால் ஆன நிதியுதவியை நிச்சயம் வழங்குவேன் என்று நம்பிக்கையுடன் சொன்னார்.
      மேலும் கடந்த 10 வருட எதிர்க்கட்சி ஆட்சியில் ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படாதது குறித்தும் தாம் அறிந்திருப்பதாகவும்
தேசிய முன்னணி  கடந்த 10 வருடத்தில்  இத்தொகுதியில் ஆட்சியமைத்திருந்தால் நிச்சயமாக  இந்நேரம் இவ்வாலயத்திற்கு பெரும் நிதியுதவி வழங்கப்பட்டு மகா கும்பாபிசேகம் நடந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
      வெற்றித் திருமகளாக உலா வர ஆலயத் தலைவர் கார்த்திக் பிரார்த்தனை செய்தார். ஆலய நிர்வாகத்தினர், கெராகான் கட்சியின் தொகுதி உதவித் தலைவர் இ.தண்டாயுதபாணி மணி, கெராகான் சிவா ஆகியோர் சிறப்பு பிரமுகராக கலந்துக் கொண்டனர்.

Comments