சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி!

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி!

தேசம் செய்திகள்: குணாளன் மணியம்

கோத்தா டாமான்சாரா, ஏப்ரல் 28-
        சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மஇகா சார்பில் பிரகாஷ்ராவ் போட்டியிடுகிறார்.
கெஅடிலான் சார்பில் சிவராசாவும், பாஸ், பிஎஸ்எம் கட்சி வேட்பாளர்கள்  போட்டியிடுகின்றனர். இந்த நான்கு முனைப் போட்டி மஇகாவுக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
       இதனிடையே, சுங்கை பூலோ நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பாயா ஜெராஸ் சட்டமன்றத்தி்ல் தேசிய முன்னனி வேட்பாளர் டத்தோ ஸின் போட்டியிடுகிறார்.

 இங்கு பாஸ், கெஅடிலான் வேட்பாளர்களும் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. கோத்தா டாமான்சாரா சட்டமன்றத்தில் தேசிய முன்னனி  வேட்பாளர்  ஹலிமாத்துல் போட்டுயிடுகிறார். இங்கு நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
       இந்நிலையில் பிரகாஷ்ராவ் வேட்பாளர் தேர்வு எண் 1 கிடைத்துள்ளது. இதைப் போலவே
தேசிய முன்னணி வேட்பாளர்கள் டத்தோ ஸின்,  ஹலிமாத்துல் ஆகிய இருவருக்கும் தேர்வு எண் 1 கிடைத்துள்ளது. இது நல்ல சகுணம். நாங்கள் வெற்றி பெறுவோம் என்று பிரகாஷ்ராவ் கூறியுள்ளார்.

Comments