தங்கரத்தினத்தின் உடலைக் கொண்டு வர உதவிய டத்தோஸ்ரீ வேள்பாரி, துன் சாமிவேலு, டான்ஸ்ரீ கேவியஸிற்கு நன்றி! மஇகா சேவை மையம் கடமையை செய்ய வேண்டும்! டத்தோ மலர்விழி குணசீலன் வேண்டுகோள்!

தங்கரத்தினத்தின் உடலைக்  கொண்டு வர உதவிய டத்தோஸ்ரீ வேள்பாரி, துன் சாமிவேலு, டான்ஸ்ரீ கேவியஸிற்கு நன்றி!
மஇகா சேவை மையம் கடமையை செய்ய வேண்டும்!
டத்தோ மலர்விழி குணசீலன் வேண்டுகோள்!

செய்தியாளர் :
 குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 5-
           துபாய் அரசாங்க மருத்துவமனையில் திடீர் மரணமடைந்த  தங்கரத்தினம் தியாகராஜன் (வயது 53) என்பவரின் உடலை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு பணம் வழங்கி பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட  மஇகா பொருளாளர் வேள்பாரி, துன் சாமிவேலு இருவருக்கும் நன்றி கூறிக் கொள்வதாக மலேசிய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் டத்தோ மலர்விழி குணசீலன் நன்றி தெரிவித்தார்.
        அதேநேரத்தில் உதவி வழங்கிய டான்ஸ்ரீ கேவியஸ், பேராசிரியர்  ராமசாமி, மலேசிய மக்கள் அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டார்.
          மலேசிய மக்கள் மலாய், சீனர், இந்தியர் என்று இனம், மொழி பார்க்காமல் உதவினர். இதனை நாம் பாராட்ட வேண்டும்.
அதேநேரத்தில் தீரவிசாரிக்காமல் உதவி வழங்கத் தவறிவிட்ட மஇகா மக்கள் சேவை மையம் வரும் காலங்களில் தன் கடமையை முறையாக செய்ய வேண்டும் என்று கெத்ரூட் என்ற மாதுவுக்கு தம் இயக்கம் மூலமாக தாம் திரட்டிய நிதியை வழங்கிய போது செய்தியாளர்களிடம் அவ்வாறு சொன்னார்.
     இந்த விவகாரம் தொடர்பில் மஇகா மக்கள் சேவை மையம் அலட்சியம் காட்டியது தொடர்பில் அவரது மனைவி கெர்துருட் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். எனினும் வேள்பாரி, துன் சாமிவேலு முயற்சியில் அவரது உடல் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டதால் இனி நாங்கள் நிம்மதியாக இருப்போம் என்று மலேசிய மக்கள் சேவை மையத்தின் தலைவர் டத்தோ பி.மலர்விழி குணசீலன் கூறினார்.
        இந்த விவகாரத்தை இதோடு முடித்துக் கொள்கிறோம். எங்கள் முயற்சிக்கு உதவிய அனைவருக்கும் டத்தோ மலர்விழி குணசீலன் நன்றி தெரிவித்தார்.

Comments