காமன்வெல்த் இளைஞர் மாநாட்டில் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் உரை

காமன்வெல்த் இளைஞர் மாநாட்டில் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் உரை

லண்டனிலிருந்து சிவசுப்பிரமணியம்

லண்டன், ஏப் 20-
     லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டின் தொடக்கக்கட்ட மாநாடான இளைஞர் மாநாட்டில் மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் உரையாற்றினார்.
       இந்த மாநாட்டில் காமன்வெல்த் அமைப்புகளைச் சேர்ந்த நாடுகளின் பேராளர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர்.
       காமன்வெல்த் அமைப்பில் உள்ள 120 கோடி இளைஞர்களின் அதிகாரப்பூர்வ குரலாக இந்த
இளைஞர் அமைப்பு செயல்பட்டு வருவதுடன் அதன் நோக்கத்தை நிறைவேற்றி வருகிறது.
    இந்த அமைப்பை திறன்பட நடத்திவரும் அதன் தலைவர் கிஷ்வா அம்பிகாபதிக்கும் அவர்தம் செயலவையினருக்கும் தன்
வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக டானஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தமதுரையில் கூறினார்.

Comments