இந்தியர்கள் தங்களுக்குள் உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்! மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் வலியுறுத்தல்

இந்தியர்கள் தங்களுக்குள் உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்!
மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் வலியுறுத்தல்

கோலாலம்பூர், ஏப்ரல் 17,
         இந்தியர்கள் தங்களுக்குள் உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனிதநேய மாமணி் ரத்னவள்ளி அம்மையார் வலியுறுத்தினார்.
          இந்த உறவு வலுப்பெறும் போது ஒற்றுமை மேலோங்குகிறது.
இதன்வழி நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று கோலாலம்பூர் இந்தியர் சங்கத்தின் தலைவர் பழனிசாமி ஏற்பாடு செய்திருந்த சித்திரைப் புத்தாண்டு விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் ரத்னவள்ளி அம்மையார் இவ்வாறு கூறினார்.
         நம் நாட்டில் இந்தியர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாதது சமூக சீர்கேடு உள்ளிட்ட  பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆகையால் நமக்குள் உறவு வலுவாக இருந்தால் ஒற்றுமையாக இருந்து இத்தகைய பிரச்சினைகளை களைய முடியும் என்று ரத்னவள்ளி அம்மையார் சொன்னார்.
          இந்தியர்கள் பலர் இன்னும் ஏழைகளாகவே இருந்து வருகின்றனர். இத்தகையவர்களின் நிலை மாற வேண்டும்.
அதேநேரத்தில் தமிழ்ப்பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளும் முறையான பள்ளிச் சீருடை உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இத்தகையவர்களுக்கு என்னால் முடிந்த பல உதவிகளை செய்து வருகிறேன். நானும் தொடர்ந்து செய்ய முடியாது. ஆகையால், இந்தியர்கள் ஒற்றுமை பலத்தின் மூலம் சுயமாக உதவிக் கொள்ள வேண்டும் என்று ரத்னவள்ளி அம்மையார் கேட்டுக் கொண்டார்.
          இந்நிகழ்ச்சிக்கு ரத்னவள்ளி அம்மையார் கணிசமான நன்கொடை வழங்கினார். இந்நிகழ்வில் டத்தோஸ்ரீ புலவேந்திரன், டத்தோ ராமலிங்கம், டத்தோ வீரப்பன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருக்கு மாலை, பொன்னாடை வழங்கி சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments