டாக்டர் சுப்பிரமணியத்தை வேதமூர்த்தியால் வீழ்த்த முடியாது! டத்தோ மலர்விழி குணசீலன் திட்டவட்டம்!

டாக்டர் சுப்பிரமணியத்தை வேதமூர்த்தியால் வீழ்த்த முடியாது!
டத்தோ மலர்விழி குணசீலன் திட்டவட்டம்!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்ரல் 8-
       மஇகா கோட்டையாக விளங்கி வரும் சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்ககப்படும் வேதமூர்த்தியால் ஒரு போதும் டாக்டர் சுப்பிரமணியத்தை வீழ்த்த முடியாது என்று மலேசிய மக்கள் சேவை மையத்தின் தலைவர் டத்தோ பி.மலர்விழி குணசீலன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
          டாக்டர் சுப்பிரமணியத்தை வீழ்த்துவது என்பது வேதமூர்த்தியால் இயலாத காரியம். அதற்கு வாய்ப்பே இல்லை. அதேநேரத்தில் சிகாமட் தொகுதியில் சிலகாலம் வேலை செய்து வருவதாகக் கூறும் எட்மண்ட் சந்தாராவுக்கு சுப்பிரமணியத்தை வீழ்த்துவது மிகப்பெரிய விஷயம். அது வெறும் பகல் கனவு. டாக்டர் சுப்பிரமணியத்தை வீழ்த்த வேதமூர்த்திக்கு ஒரு துளிகூட வாய்ப்பு இல்லை என்று டத்தோ பி.மலர்விழி சொன்னார்.   
       எதிர்க்கட்சிக்கு வேதமூர்த்தி ஒரு ஒதுக்கப்பட்ட விளையாட்டாளர். இதில் விளையாட அவருக்கு வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் ஈப்போ பாராட்டில் தன்னை எதிர்த்து போட்டியிடும்படி குலசேகரன் சவால் விடுத்துள்ளது பொருள் படிந்தது. இது அரசியலில் வழக்கமான ஒன்று. ஆனால், டாக்டர் சுப்பிரமணியம் ஒரு முதிர்ச்சியான மனிதர். அவர் சிகாபட்டில் மீண்டும் போட்டியிட வேண்டும். டாக்டர் சுப்பிரமணியம் அதிர்ஷ்டக்காரர். ஏனெனில் இரண்டு இந்தியர்கள் அவரை எதிர்த்து போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் ஒரு சீனர் அல்லது அம்பிகா சீனிவாசன் போன்றவர்கள் போட்டியிட்டால் டாக்டர் சுப்பிரமணியத்திற்கு தூங்க முடியாத சோதனை காலம் எனலாம். ஆனால், அப்படி நடக்கவில்லை. மக்கள் கூட்டணி கடைசி நேரத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளதை எண்ணி வேதமூர்த்தி மனநிறைவு கொள்ள வேண்டும் என்று டத்தோ பி.மலர்விழி குணசீலன் குறிப்பிட்டார்.

Comments

  1. மாபெரும் அரசியல் ஆய்வாளர் இவர்..... ஆய்வின் தொ'குப்பையை முன் வைக்கின்றார்.... தூபம் போடுவதை வீட்டுட்டு போய் உருப்புடுற வேலைய பாரு ராசா....

    ReplyDelete

Post a Comment